கம்பராமாயணம் 6831 · யுத்த 8.43

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால வெம் கனல் போலும் கணைகளால்
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை
மாலை கொண்டு வணங்கியவாறு எலாம்
சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால்.

பொருள் · Meaning in Tamil

கால வெங்கனல் போலும் - (அப்போது பாட்டனாகிய மாலியவான் இராவணனை நோக்கிக் கூறுவான்) ஊழிக் காலத்துக் கடலிடைத் தோன்றும் கடுந்தீயே போன்று; கணைகளால் - (இராமனின்) அம்புகளால்; வேலை வெந்து நடுங்கி - சமுத்திர ராசனாகிய வருணன் தீப்பட்டு நடுங்கி; வெயில் புரை மாலை கொண்டு - வெயிலைப் போல் ஒளிவிடும் நவமணி மாலையைக் கையுறையாக கொண்டு; வணங்கினவாறு எலாம் - (இராமனைத்) தொழுது நின்ற செய்தி எல்லாம்; சூலம் என்ன - சூலாயுதம் பாய்வது போன்று; என் நெஞ்சம் துளைக்கும் - என் உள்ளத்தைக் குடையும்.

மாலியவான் இராவணன் தாயாகிய கேகயியைப் பெற்ற சுமாலியின் உடன்பிறந்தோன் ஆவான். அமயம் வாய்க்கும் போதெல்லாம் இராவண இராசதானியில் அறம் உரைக்கும் நல்லோர்கள் மிகச் சிலருள் ஒருவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'How the sea, scorched by arrows like the fierce fire at the end of time,
  2. trembled and came bowing,
  3. bringing a necklace that shone like sunlight:
  4. all of it pierces my heart like a trident.'

What the poem says

Māliyavāṉ speaks first. He is Irāvaṇaṉ's great-uncle, brother of Irāvaṇaṉ's maternal grandfather, and one of the very few at Irāvaṇaṉ's court who speak up for what is right.

He says it pierces his heart like a trident to recall how the ocean god, scorched by Irāmaṉ's arrows as if by the fire at the end of the world, came trembling and bowing with a gift of a necklace bright as the sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāla veṅ kaṉal pōlum kaṇaikaḷāl
vēlai ventu naṭuṅki veyil purai
mālai koṇṭu vaṇaṅkiṉavāṟu elām
cūlam eṉṉa eṉ neñcait toḷaikkumāl.