கம்பராமாயணம் 6832 · யுத்த 8.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடல் கிழிபடக் கண்டதும் - கடலானது இருபிளவாகக் கிழிந்தவுடன்; மொழிபடைத்த வலி மாண்டது என- பாராட்டுதற்குரிய கடலின் வலிமை (இன்றோடு) அழிந்தது எனுமாறு; ஓர் பழி படைத்த பெரும் பயத்து அன்னவன் - ஒப்பற்ற பழியினைப் பெற்றுக் கொண்ட பேரச்சத்தோடு வருணன்; வழி கொடுத்தது - (இராமனின் வேண்டலுக்கிணங்கி) அவனுக்கு (அணைகட்ட) வழிவகுத்துக் கொடுத்தது (எனும் செய்தி); என் உள்ளம் வருத்தும் - என் மனத்தினை வருத்துகின்றது.
உலகை அழிக்கும் திறம் வாய்ந்தது கடல் என்றான் சென்ற பாடலில், அக்கடலைக் கிழிக்கும் திறம் வாய்ந்தவன் உன் பகைவன் என அறிவுறுத்துகின்றான் மாலியவான் இப்பாடலில். மொழி படைத்த வலி சான்றோர் மொழி போல் வலிமை படைத்த ஆற்றல் எனினுமாம். இராமனை வெளிப்படையாகப் புகழின், இராவணன் வெகுளக் கூடுமாதலால், வருணன் அச்சத்தை வைத்து, இராமன் பெருமையை உணர்த்தும் திறம் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That when the sea was seen torn apart, its famed strength
- was gone, as people say, and that he, in great fear
- that brought him disgrace, gave him the way:
- this troubles my heart.'
What the poem says
Māliyavāṉ continues. The mighty ocean, famous for its strength, has been split open. Varuṇaṉ was so afraid that he accepted disgrace and gave Irāmaṉ a way across.
Māliyavāṉ is careful. Praising Irāmaṉ openly would enrage Irāvaṇaṉ, so he makes the point through the sea god's fear: if the ocean that can drown the world gave way, think what kind of enemy this is.