கம்பராமாயணம் 6833 · யுத்த 8.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படைத்த மால்வரை - (இறைவன்) படைத்த பெரிய மலைகள்; யாவும் வேர் பறித்து - யாவற்றையும் வேருடன் அகழ்ந்தெடுத்து; துடைத்த வானரவீரர் - (உலகிலேயே பெரிய மலைகள் இனி இல்லை என்னுமாறு) செய்து விட்ட குரங்கு இன வீரர்கள்; தம் தோள்களைப் புடைத்த வாறும் - (வெற்றிக் களிப்பால்) தம் தோள்களைக் கொட்டி மகிழ்ந்த செயலும்; புணரியைப் போக்குஅற அடைத்தவாறும் - அவ்வாறு மலைகளைப் பெயர்த்து வந்து இட்டு, மாகடலை இடம் விட்டு நகராதவாறு அடைத்த செயலும்; என் உள்ளத்து அடைத்த - என் உள்ளத்தினை (வேறு எண்ண இயலாத படி) அடைத்துக் கொண்டுள்ளன.
புணர்தல்- கூடுதல். எல்லா நதிகளும் வந்து கூடுமிடமாதலின், கடல் புணரியெனப் பட்டது. ஓயாமல் அலைந்து, நகர்ந்து கொண்டேயிருக்கும் கடலை அப்புறம் இப்புறம் அசையாமல் சேது நிறுத்தி விட்டது என்பான், "புணரியைப் போக்கு அற அடைத்த வாறும்" என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'How the monkey heroes, who tore out by the roots and swept away
- every great mountain that was ever made, slapped
- their shoulders, and how they blocked the sea
- so it could not move: these have blocked up my heart.'
What the poem says
The monkeys have uprooted every great mountain in the world, and now they slap their shoulders in triumph. They have dammed the restless sea so that it can no longer surge back and forth.
The word play runs through the verse: as they blocked the sea, so the thought of it blocks Māliyavāṉ's heart and leaves no room for any other thought. The sea is called puṇari, 'the meeting place', because all rivers meet in it.