கம்பராமாயணம் 6834 · யுத்த 8.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேந்த! - (இலங்கை) வேந்தனே!; காந்து வெஞ்சின வீரர் கணக்கு இலார் - கனலும் கொடுஞ்சினமுடைய எண்ணற்ற வானர வீரர்கள்; தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தர, தர- தங்கள் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு தக்க மலைகளைக் கொண்டு வந்து கொடுக்க, கொடுக்க; வெற்பை - அந்தப் பெரு மலைகளை (யெல்லாம்); ஒருவன் விரல்களால் - (நளன் என்னும்) ஒப்பற்ற வீரன் தன் கைவிரல்களால்; ஏந்தி இட்டது - தாங்கி (தாங்கிக்) கடலில் இட்டது; என் உள்ளத்தின் இட்டது - என் நெஞ்சிலேயே இட்டது போன்றிருந்து என்னை வருத்துகின்றது.
வந்து வீழ்ந்த மலைகள், வானர வீரர்கள் உடல் வடிவத்துக்கு ஏற்றாற் போலவன்றி, அவர் நெஞ்சுரத்துக்கு ஏற்றாற் போல அமைந்தது என்பார் "தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர" என்றார். "தரத்தர" எனும் அடுக்கு விரைவும் பன்மையும் குறித்து நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As countless heroes burning with fierce anger
- kept bringing mountains, each fit for his own strength,
- King, that one of them lifted a mountain in his fingers
- and set it down, that has been set down upon my heart.'
What the poem says
Countless furious monkeys brought mountains as large as their courage allowed, one after another. One of them, Naḷaṉ, picked each up in his fingers and set it into the sea.
Māliyavāṉ says it is as if every one of those mountains has been laid on his own heart.