கம்பராமாயணம் 6835 · யுத்த 8.47

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தொல் நகர் சுட்டவா கண்டும் - நமது தொன்மை வாய்ந்த பழம் பதியான இலங்கையை (அனுமன்) எரித்தவாறு கண்ணாற் கண்டிருந்தும், வேலையைத் தட்டவா கண்டும் - கடலை (அணையிட்டுத்) தடுத்துள்ளவாறும் கண்டபிறகும்; தா அற்ற தெவ்வரைக் கட்டவா கண்டும் - அழிவற்ற (ஆற்றல் பெற்ற) கரன் முதலிய பகைவர்களை அழித்தவாறு கண்டபின்னும்; கண் எதிரே வந்து விட்டவா கண்டும் - (இத்தனையும் செய்தவர்கள் இப்போது, நம்) கண்ணுக்கெதிரேயே வந்து விட்டதனையும் (கண்ணாரக்) கண்டும்; மேல் எண்ண வேண்டுமோ? - (இவ்வளவும் கண்டு விட்டபின்) மேலே (இங்குக்கூடிச்) சிந்தனை செய்வதும் தேவைதானோ? (தேவை இல்லை என்றபடி)

தா அற்ற தெவ்வர்- அழிவற்ற ஆற்றல் மிக்க பகைவர்கள். அவர் விராதன், கவந்தன், கரதூடணர், மாரீசன், திரிசிரன் முதலானோர். தா- அழிவு. தெவ்வர் - பகைவர். தட்டல் - தடுத்தல். கட்டல் - களையெடுத்தல். அழித்தல். இனி, தொன்னகர் சூழ்ந்த கடலைச் சுட்டவாறு கண்டும், தடுத்தவாறு கண்டும் எனவும் உரைக்கலாம். அப்போது, "தொல்நகர் வேலை" என்பது, மத்திமதீபமாக நிற்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Having seen how our ancient city was burned, seen how the sea
  2. was dammed, seen how foes who had never known defeat
  3. were rooted out, and seen how they have now come
  4. right before our eyes, need we think any further?'

What the poem says

Māliyavāṉ sums up. They have seen their ancient city burned by Aṉumaṉ, the sea dammed, and enemies once thought invincible, Virātaṉ, Kavantaṉ, Karaṉ and Tūṭaṇaṉ, Mārīcaṉ and others, wiped out. Now the ones who did all this stand before their eyes.

After all that, what is left to deliberate? The answer is clear: return Cītai. The lines can also be read as 'seeing the sea around our ancient city burned and dammed'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭṭavā kaṇṭum tol nakar vēlaiyait
taṭṭavā kaṇṭum tā aṟṟa tevvaraik
kaṭṭavā kaṇṭum kaṇ etirē vantu
viṭṭavā kaṇṭum mēl eṇṇa vēṇṭumō?