கம்பராமாயணம் 6836 · யுத்த 8.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று தாயைப் பயந்தோன் இயம்பலும் - இவ்வாறு இராவணனின் தாயைப் பெற்ற (மாதாமகனே ஆகிய) மாலியவான் இராவணனிடம் உரைத்த போது; வாயைத் தின்று - (இராவணன் சினத்தால்) உதட்டைக் கடித்து; விழிவழித் தீ உக - கண்களின் வழியாகத் தீப்பொறி சிந்த; 'நன்று, நன்று - 'நல்லது, நல்லது; நம்மந்திரம் நன்று - நம் மந்திர ஆலோசனை நன்றாக நடக்கிறது?'; எனா - என்று வெகுண்டு; இளவலோடு என்றும் வாழ்தி - (நீயும் என்) தம்பியான வீடணனோடு சேர்ந்து இனிதாக வாழ்வாயாக இப்போதே செல்' என்றான்.
தாயைப் பயந்தோன் - பாட்டன். மாலியவான். முன்பு வெளியேற்றப் பட்ட தம்பி வீடணன் நினைவுக்கு வரவே, "இளவலோடு ஏகு" என்றான் வீடணன், "நன்று நன்று நம் மந்திரம் நன்று" என்பது இகழ்ச்சிக் குறிப்பு. பகைவர் அழிவு பேச வேண்டிய நம் மந்திர சபை, பகைவர் பெருமை பேச அமைந்த ஒன்றாக மாறியுள்ளது கண்டு அவன் உள்ளத் தெழுந்த சினத்தால் வந்த இகழ்ச்சி இது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he who had fathered his mother spoke thus,
- biting his lip, with fire pouring from his eyes,
- he said, 'Good, good! Our council is good!
- Live for ever; go off with the younger brother!'
What the poem says
Irāvaṇaṉ explodes. Biting his lip, his eyes throwing sparks, he mocks: 'Good, very good! What a fine council this is!' A council meant to plan the enemy's ruin has turned into one praising the enemy.
He tells the old man to go and live happily with his younger brother, Vīṭaṇaṉ, whom Irāvaṇaṉ had already driven out for giving the same advice.