கம்பராமாயணம் 6837 · யுத்த 8.49

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முற்றினான் இதம் ஈனமே கொல்? - (இவ்வாறு இராவணன் வெகுண்டுரைத்ததைக் கேட்ட) ஆண்டும் அநுபவமும் பண்பும் முற்றிய மாலியவான், நல்லது கூறுதல் கூட (இங்கு) இழிவாகுமோ? என்று வருந்தி மோனமாகி இருந்தனன் - பேசாது ஒடுங்கியிருந்தான்; ஆன காலை - அப்போது; அடியின் இறைஞ்சிய சேனை நாதன் - (இராவணன்) அடிகளை வணங்கியவனான படைத்தலைவன் (பிரகத்தன்); இனையன கூறினான் - பின்வருவனவற்றைக் கூறினான்.

கொல் - ஐயப் பொருள் தந்தது. இதம் - நன்மை. இதம் எல்லாம் இராவணனுக்கு ஈனம் என்பதால், ஈனம் எல்லாம் அவனுக்கு இதம் ஆகும் என்பது, அவன் படைத்தலைவன் கூறவிருக்கும் ஈனங்களை அவன் விரும்பிக் கேட்கத் தொடங்குவதால் உணர்த்தினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, 'Is good advice then a disgrace?', the one ripe in years
  2. fell silent and sat without a word;
  3. at that moment the lord of the army,
  4. bowing at his feet, spoke these words.

What the poem says

Māliyavāṉ, old in years, experience and character, is hurt. Is it shameful now even to give good advice? He falls silent.

Then the commander of the army, Pirakattaṉ, bows at Irāvaṇaṉ's feet and speaks. The poet's point: to Irāvaṇaṉ good counsel is shameful, so shameful counsel is what he will now gladly hear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṉamēkol itam? eṉa eṇṇuṟā
mōṉam āki iruntaṉaṉ muṟṟiṉāṉ;
āṉa kālai aṭiyiṉ iṟaiñciya
cēṉai nātaṉ iṉaiyaṉa ceppiṉāṉ.