கம்பராமாயணம் 6838 · யுத்த 8.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயா! - ஐயனே! ; கண்மை - கண்ணுக்கு நேராக; இந்நகர் வேலை கடந்த - இவ்விலங்கை மாநகரைச் சுற்றியுள்ள கடலைக் கடந்த; அத்திண்மை ஒன்றும் அலால் - அந்த வல்லமைஒன்றே (தம் கண்கட்குப் படுகின்றதே) யன்றி; திசை காவலர் எண்மரும் - எட்டுத் திக்குப் பாலகரும், இவற்கு - நம் வேந்தனாகிய இவனுக்கு; ஏவல் செய்கின்ற - குற்றேவல் புரிகின்ற; அவ் உண்மை ஒன்றும் - அந்தப் பேருண்மை ஒன்றினையும்; உணர்ந்திலைபோல் - (நீ) உணரவில்லை போலும்; என்றான்.
ஐயனே என விளித்தது மாலியவானை. கண்மை - கண்ணின் தன்மையாகிய காட்சி. இங்குக் கண்ணுக்கு நேராகக் கண்டதைக் குறித்தது. பகைவன் தீரச் செயல் ஒன்றே ஒன்று மட்டும் உங்கட்குக் கண்ணாரக் கண்ட காட்சியாகத் தெரிகிறதேயன்றி, நம்வேந்தன் புரிந்துள்ள வீரச் செயல்கள் பல புரியாமற் போயுள்ளன; இருக்கட்டும். எட்டுத் திக்குப் பாலகர்களும் நம் வேந்தன் இணையடியினை வந்து இறைஞ்சிய வண்ணம் உள்ளார்களே! அந்த உண்மை ஒன்றையாவது நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்று படைத்தலைவன் மொழிகின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Except for that one feat of crossing the sea around this city before your eyes,
- it seems you have not grasped even this one truth,
- that all eight guardians of the directions
- do service to this king,' he said.
What the poem says
The commander turns on Māliyavāṉ. The old man has seen the enemy do one bold thing before his eyes, cross the sea, and that is all he can think about.
He seems to have forgotten all of their own king's great deeds, or at least the one plain fact that the eight gods who guard the directions of the world serve Irāvaṇaṉ and bow at his feet.