கம்பராமாயணம் 6841 · யுத்த 8.53

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொழி கண்ணினன் வேத்திரம்
பற்றும் அம் கையினன் படிகாரன் நின்று
‘ஒற்றர் வந்தனர் ‘என்ன உணர்த்தினான்.

பொருள் · Meaning in Tamil

முற்றும் மூடிய கஞ்சுகன் - (இப்போது) (உடல்) முழுவதும் மூடிய சட்டையையுடையவனாய்; வெற்று அனல் மூட்டிய பொறிக் கண்ணினன் - வெறும் (சினத்) தீ மட்டுமே மூட்டப்பட்டதினால் எழும் பொறி பறக்கும் கண்ணினையுடையவனாய்; வேத்திரம் பற்றும் அங்கையினன் - பிரம்பினைப் பற்றிய கைகளை யுடையவனாய்; படிகாரன் - வாயிற் காவலன் ஒருவன் (உட்புகுந்து); 'இன்று ஒற்றர் வந்தனர்' - 'இப்பொழுது உளவு அறிபவர் வந்துள்ளனர்; என்று உணர்த்தினான் - என்று இராவணனுக்கு அறிவித்தான்.

கஞ்சுகன் - சட்டையணிந்தவன். முன்பு சமுதாயத்தில் மேன்மக்கள் சட்டையணியாமலும், கீழ்மக்கள் சட்டையணிந்தும் இருந்தனர் என்பது இதனாலும் தெளிவாம். (3082) முன்பும் உணர்த்தினார். வேத்திரம் - பிரம்பு. படி - வாயில் படி. அரச மனையின் வாயிற் படியில் காவல் புரிபவன் ஆதலின் "படிகாரன்" என்றார். "படிகாரர்! எம் வரவு சொல்லுதிர் மன்னவற்கே!" (2102) என்று முன்பும் வந்தது. இன்று - இப்பொழுது எனும் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A doorkeeper, his body wholly covered by a jacket,
  2. his eyes sending out sparks of a bare kindled fire, a cane
  3. held in his hand, came in now
  4. and announced, 'The spies have come.'

What the poem says

A doorkeeper enters the council hall. He wears a full-length jacket, the dress of a servant, since in those days people of rank went bare-chested. He carries a cane, and his eyes glare like sparks.

He announces that the spies have returned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟṟum mūṭiya kañcukaṉ mūṭṭiya
veṟṟu aṉal poṟik kaṇṇiṉaṉ vēttiram
paṟṟum aṅkaiyiṉaṉ paṭikāraṉ iṉṟu
‘oṟṟar vantaṉar ‘eṉṉa uṇarttiṉāṉ.