கம்பராமாயணம் 6842 · யுத்த 8.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாயில் காவலன் கூறி வணங்கலும் - வாயில் காப்போன் (இவ்வாறு) கூறி வணங்கியபோது, வயங்கு எரி மேய வெங்கண் விறல்கொள் - ஒளிரும் தீ எரிவது போன்ற கொடிய கண்களையும் வல்லமையையும் கொண்ட; இராக்கதர் நாயகன் - அரக்கர்களின் தலைவனான இராவணன்; 'புகுத்து இங்கு' என - (அவ்வொற்றர்களை), 'இங்கு புகுமாறு செய்' என்று கூற; நன்று எனப் போய் - 'நன்று' என உரைத்துச் சென்று; அவன் புகுத்த - வாயிற்காவலன் அவ்வாறே புகவிட; புகுந்தார் - (அவ்வொற்றர்கள்) உட்புகுந்தனர்.
வெங்கண் - கொடுமை. விறல் - ஆற்றல். இராவணன் கண்களில் கொடுமையே ஓயாது குடிகொண்டிருத்தலை, "வயங்கு எரி மேய வெங்கண் இராக்கதர் நாயகன்" என்றார். பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் (குறள் 709) ஆதலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the gatekeeper said this, the mighty lord
- of the Rākṣasas, whose cruel eyes held a blazing fire,
- said, 'Bring them in here'; he said 'Very well', went,
- and showed them in, and they entered.
What the poem says
Irāvaṇaṉ, whose cruel eyes always burn like fire, orders the spies brought in, and the doorkeeper obeys.
The Tirukkuṟaḷ says that the eyes reveal hatred and friendship, and Irāvaṇaṉ's eyes are always full of hostility.