கம்பராமாயணம் 6843 · யுத்த 8.55

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பனைக்கை வன்குரங்கின் - பனந்துண்டம் போன்ற கைகளையுடைய வலிய குரங்குகளினுடைய; படர் சேனையை - பரந்த சேனையை, நினைக்கும் தோறும் - எண்ணும்தோறும், திடுக்கிடும் நெஞ்சினார் - நடுங்கும் மனத்தவராயும்; கனைக்கும் தோறும் - (பேசுதற்குத் தொண்டையினைச் சரிசெய்யக்) செரும் தோறும்; உதிரங்கள் கக்குவார் - (குபுக் கென்று) இரத்தம் கக்குபவராயும் உள்ள அவ்வொற்றர்கள்; மனைக் கண் வந்து - அரண்மனைக்குள் நுழைந்து; அவன் பாதம் வணங்கினார் - இராவணனின் அடிகளை வணங்கினர்.

வானரர்கள் மொத்திய ஊமைக் காயங்களால் உள்ளுறுப்புகள் நைந்து, புண்ணாகி, இரத்தம் வயிற்றில் ஊறிக் கொண்டேயிருத்தலால், வாய் திறந்தால் குருதி கொப்பளிக்கும் (மன) ஓவியக் காட்சியைச் சொல்லாற் பிடித்துக் கவிச்சக்கரவர்த்தி, "கனைக்கும் தோறும் உதிரங்கள் கக்குவார்" என ஓதியுள்ள படிமத்தின் அருமையினை ஓதி யுணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They came into the palace and bowed at his feet,
  2. their hearts lurching every time they thought
  3. of the spreading army of strong monkeys with arms like palm trunks,
  4. and spitting blood each time they cleared their throats.

What the poem says

The spies enter and bow at Irāvaṇaṉ's feet. Their hearts jump with fear every time they remember the monkeys, whose arms are as thick as palm trunks.

The beating they took has bruised them inside, and whenever they clear their throats to speak they cough up blood. The commentary praises the vividness of this small detail.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉaikkaṇ vantu avaṉ pātam vaṇaṅkiṉār
paṉaik kai vaṉ kuraṅkiṉ paṭar cēṉaiyai
niṉaikkumtōṟum tiṭukkiṭum neñciṉār
kaṉaikkumtōṟum utiraṅkaḷ kakkuvār.