கம்பராமாயணம் 6844 · யுத்த 8.56

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வெள்ள வாரி விரிவொடு அவ் வீடணத்
தள்ளவாரி நிலைமையும் தாபதர்
உள்ளவாறும் மின் ‘என்றான்; உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்.

பொருள் · Meaning in Tamil

உயிர் கொள்ள வாய் வெருவும் - உயிர்களைக் கொள்ள விரும்பி, வாயைக் கடிக்கும்; கொடுங் கூற்று அனான் - கொடிய கூற்றுவனைப் போன்ற இராவணன்; 'வாரி வெள்ள விரிவொடு - "கடல் வெள்ளம் போன்று பரந்த வானரச் சேனையின் விரிவோடு; அவ்வீடணத் தள்ளவாரி நிலைமையும் - அந்த வீடணன் என்னும் (போருக்கஞ்சி ஒளிந்த) சோம்பேறியின் நிலைமையையும்; தாபதர் உள்ளவாறும் - தவம் செய்வோர் வேடம் தரித்த இராம இலக்குவர் உள்ள திறனையும்; உரைமின்' என்றான் - (எனக்குக்) கூறுங்கள்" என்று கூறினான்.

வீடணன், போர்க்கு அஞ்சி இராமனிடம் ஓடியவன், என்பது இராவணனின் நினைவு ஆதலின், "அவ்வீடணத் தள்ளவாரி" என்றான். தள்ள பாரு - எனுந் தொடர் போருக்கஞ்சுபவன் எனக் கன்னடத்தில் இன்றும் வழங்குகிறது என்பர். போருக்கஞ்சிச் சோம்பலில் ஏறியவன் ஆதலின், தமிழில் தள்ளவாரி என்பது சோம்பேறியைக் குறிப்பதாயிற்று. "தூங்கல், அசைதல், அலசுதல், சோம்பே, சடமடி தள்ள வாரமும் தருமே" என்பது பிங்கலந்தை. இன்று "தெல்லவாரி" என்பது நாட்டுவழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Tell me the extent of that army, vast as a flood of the sea,
  2. the state of that coward Vīṭaṇaṉ, and how
  3. the ascetics are,' he said, he who was like cruel Death
  4. whose mouth trembles to seize lives.

What the poem says

Irāvaṇaṉ, like Death itself eager to snatch lives, questions the spies. He wants to know three things: how large the monkey army is, which he pictures as a flood; how that coward Vīṭaṇaṉ is faring; and how the two 'ascetics', Irāmaṉ and Ilakkuvaṉ in their forest dress, are doing.

He calls Vīṭaṇaṉ taḷḷavāri, a rare word for a shirker who runs from battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veḷḷa vāri virivoṭu av vīṭaṇat
taḷḷavāri nilaimaiyum tāpatar
uḷḷavāṟum, uraimiṉ ‘eṉṟāṉ; uyir
koḷḷa vāy veruvum koṭuṅ kūṟṟu aṉāṉ.