கம்பராமாயணம் 6845 · யுத்த 8.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடியம் அந்நெடுஞ் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றோம்; முதுவேலையின்
படியை நோக்கி அவ் வானம் படர்குறும்
கடிய வேகக் கலுழனில் கண்டிலம்.
பொருள் · Meaning in Tamil
அடியம்- (உன்) அடியேம் ஆகிய நாங்கள்; அந் நெடுஞ்சேனையை - அந்த நீண்ட (குரங்குச்) சேனையை; ஆசையால்- (மனங்கொண்ட) விருப்பத்தால்; முடிய நோக்கல் உற்றோம் - முழுவதும் நோக்கத் தொடங்கினோம்; முதுவேலையின் படியை நோக்கி - பழமையான கடலின் எல்லையைக் காணுமாறு, எப்பாலும் படர்குறும் - எல்லாப் பக்கங்களிலும் பார்த்தல் பொருந்திய; கடிய வேகக் கலுழனின் - கடுமையான வேகம் பொருந்திய கருடனைப் போன்று; கண்டிலம் - காண இயலாதவர்கள் ஆனோம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We, your servants, eager to survey that vast army
- from end to end, set out to look; but like fierce, swift Garuḍa
- who ranges in every direction to view the limits
- of the ancient sea, we could not see it all.'
What the poem says
The spies tried to take in the whole army from one end to the other and failed.
They compare themselves to Garuḍa, the swift eagle of Viṣṇu, flying in every direction to find the edges of the ancient ocean and never reaching them. The army is as boundless as the sea.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭiyam an neṭuñ cēṉaiyai ācaiyāl
muṭiya nōkkaluṟṟōm; mutu vēlaiyiṉ
paṭiyai nōkku, ep pālum paṭarkuṟum
kaṭiya vēkak kaluḻaṉiṉ kaṇṭilam.