கம்பராமாயணம் 6847 · யுத்த 8.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எல்லை நோக்கவும் - (இராமன் தன்) எல்லையிலே வந்து தன்னை நோக்கி வரம் கிடக்கவும்; எய்திலதாம் எனும் - (கடல்) வந்து உதவவில்லை என்கின்ற; சொல்லை நோக்கிய மானுடன் - (பழி) மொழியைக் கருதிய (இராமன் ஆகிய) மானுடன்; தோள் எனும் கல்லை நோக்கி - தனது தோள்கள் என்னும் மலைகளைப் பார்த்து; கணைகளை நோக்கி - (அம்பறாத் தூணியில் உள்ள) அம்புகளைப் பார்த்து; தன் வில்லை நோக்கவும் - தன்னுடைய (தோளிற் கிடந்த) வில்லினை நோக்கிய அளவில்; வேலை வெந்தது - கடல் எரிந்தது.
மதியாது கிடந்த கடலின் மேல் வெகுளாது போயின் உலகு பழிக்கும்; அடைக்கல தருமம் ஆபத்தைச் சந்திக்கும், என வெகுண்டான். ஆதலின் "எல்லை நோக்கியும் எய்திலதாம் எனும் சொல்லை நோக்கிய மானுடன்" என்றார் கல் - மலை. பெருமைக்கும் உயர்வுக்கும் வன்மைக்கும் ஏற்ற உருவகம். இந்தத் தோளும், அம்பும், வில்லும் நோக்கி முடிப்பதற்குள் கடல், வெந்து முடிந்திருந்தது என்பார். "நோக்கவும் வெந்தது வேலையே” என்றார். விரைவுயர்வு நவிற்சியணி யென்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even as he looked to its shore, it did not come' — that was the reproach
- the man weighed; and as he looked at his shoulders,
- those rocks, and looked at his arrows, and looked at his own
- bow — even as he looked, the ocean was burnt.
What the poem says
The spies sent by Irāvaṇaṉ have returned from Irāmaṉ's camp and are reporting what they saw. They recall how Irāmaṉ, after waiting on the shore for the sea-god who would not appear, grew angry at the thought that the world would blame him for letting the ocean slight him.
The poet lingers on the glances: at his rock-like shoulders, at his arrows, at his bow. Before the glance was complete the sea was already scorched. The figure is hyperbole of speed: the anger acted faster than the looking.