கம்பராமாயணம் 6850 · யுத்த 8.62

Section யுத்த காண்டம் / 8. ஒற்றுக் கேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மருந்து தேவர் அருந்திய மாலைவாய்
இருந்த தானவர் தம்மை இரவி முன்
பெருந்திண் மாயற்கு உணர்த்திய பெற்றியில்
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினால்.

பொருள் · Meaning in Tamil

தேவர் மருந்து அருந்திய மாலை வாய் - தேவர்கள் அமிழ்தம் உண்ட ஒரு மாலைப்பொழுதில்; இருந்த தானவர் தம்மை -அவர்களிடையே மறைந்திருந்த அசுரர்களை; இரவி முன் பெருந்திண் மாயற்கு - முன்பு, சூரியன் பெருவலிமை வாய்ந்த திருமாலுக்கு; உணர்த்திய பெற்றியின் - (இவர் அசுரர் எனக்) காட்டிக் கொடுத்த தன்மை போல்; நும்பி சினத்தினான் - உன்தம்பியாகிய வீடணன் கோபங் கொண்டவனாய், தெரிந்து காட்டினான் - குரங்கு வடிவத்திலிருந்த எங்களை வானரர்கட்கு (இவர்கள் அரக்கர் எனக்) காட்டிக்கொடுத்தான்.

மருந்து-அமுதம். "சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று" - (குறள். 82)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the evening when the gods drank the deathless drink,
  2. the demons who sat among them — just as the Sun once
  3. made them known to great and mighty Māl, in that same way
  4. your brother, in his anger, picked us out and exposed us.

What the poem says

The spies explain how they were caught. They had slipped into the army disguised as monkeys, but Vīṭaṇaṉ recognised them and pointed them out.

The comparison is to the churning of the ocean: when the gods were drinking the nectar of immortality, demons disguised as gods sat among them, and the Sun revealed them to Viṣṇu (Māl). Vīṭaṇaṉ played the Sun's part, unmasking his own people.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruntu tēvar aruntiya mālaivāy
irunta tāṉavartammai iravi muṉ
perun tiṇ māyaṟku uṇarttiya peṟṟiyiṉ
terintu kāṭṭiṉaṉ numpi ciṉattiṉāṉ.