கம்பராமாயணம் 6852 · யுத்த 8.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அக்கொற்றவன் - அந்த வெற்றி வீரனாகிய இராமன்; இங்கு சரங்கள் இவற்றால் - இங்குள்ள இந்த அம்புகளினால்; தான் பண்டு உடை வரங்கள் சிந்துவென் என்றனன் - முன்பு இராவணன் பெற்றுள்ள வரங்களையெல்லாம் அழிப்பேன் என்று எம்மிடம் கூறினான்; மற்று - மேலும்; எமை குரங்கு அலாமை தெரிந்தும் - நாங்கள் ஏமாற்றக் குரங்கு வேடம் கொண்டோர் உண்மையில் குரங்குகள் அல்லோம் என்பது தெரிந்தும்; இரங்க உய்ந்தனம் - எங்கள்பால் இராமன் காட்டிய கருணையினால் பிழைத்து வந்தோம்; ஈது எங்கள் ஒற்று என்றார் - இதுவே நாங்கள் ஒற்றறிந்து வந்தது என்று சொன்னார்.
தாம் உயிர் பிழைக்கவிட்ட இராமனின் கருணைப் பெருக்கை மறவாமல் அவன் எதிரிமுன் உரைக்கும் மாண்பினைப் போற்றலாம். முன்பு சீதை கூறிய சொற்கள் (5188, 5189) இங்கு நினைக்கத்தகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With these arrows here, the boons he once won
- I will scatter,' he said; and though he knew
- that we were not monkeys, that conqueror
- took pity, and we escaped alive. This is our spying,' they said.
What the poem says
The spies end their account. Irāmaṉ told them that his arrows would undo all the boons Irāvaṇaṉ had won long ago through penance. Although Irāmaṉ knew they were enemy spies in disguise, he spared them out of compassion.
It is notable that the spies praise their enemy's mercy openly before their own king, who has none.