கம்பராமாயணம் 6853 · யுத்த 8.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மற்றும் யாவையும் - அங்கு நடந்த பிற செய்திகள் யாவற்றையும், வாய்மைய வானவன் - உண்மையையுடைய தேவனாகிய இராமபிரான்; சொற்ற யாவையும் - (இராவணனிடம் சொல்க எனச்) சொல்லிய யாவற்றையும்; சோர்வின்றிச் சொல்லினார்- மறவாமல் சொன்னார்கள் ஒற்றர்கள்; இற்றை நாள் முதல் - மேலும், இன்றைய நாள் தொடங்க; கோளொடு குற்றம் யாவையும் நீங்குக- தமையோடு கூடிய குற்றங்கள் யாவையும் உன்னிடமிருந்து நீங்குவன ஆகுக! ஆயு உண்டாக என்றார்- உன் வாழ்நாள் வளர்வதாகுக என்று வாழ்த்தினர்.
சோர்வு -மறதி. தளர்ச்சியுமாம். இராமன் வெகுளும் அளவு தீமை புரிந்துள்ளான் என உணர்ந்த ஒற்றர்கள், இன்று முதல் அக்குற்றங்கள் நீங்குக என்று குறிப்பாக உணர்த்தினர். கோள்- கொள்ளுதல். இராவணன் அழிவனோ என்ற அச்சத்தால் அவனை ஒற்றர் வாழ்த்தியதைப் பாண்டியனின் வாயில் காவலன் பலமுறை வாழ்த்திய சிலப்பதிகாரச் செய்தியோடு ஒப்பிட்டுணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- And all the rest, and everything the truthful god
- had said, they told without forgetting any of it;
- 'May every fault leave you, along with all that clings to it;
- from this day on may long life be yours,' they said.
What the poem says
The spies repeat everything else they witnessed and every message Irāmaṉ, the god who keeps his word, asked them to carry. Then they bless their king: may his faults leave him from today, and may he live long.
The blessing hints at what they fear. Irāvaṇaṉ has done so much wrong that Irāmaṉ is angry, and only if those wrongs end can he survive. Their anxious blessing recalls the gatekeeper in the Cilappatikāram who blessed the Pāṇṭiya king again and again before bringing him bad news.