கம்பராமாயணம் 6854 · யுத்த 9.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வைது எனக் கொல்லும் - பெரியோர் இட்ட சாபம் போல் (தப்பாமல் உடனே) கொல்லவல்ல; விற்கை மானிடர் - வில்லைக் கையில் ஏந்திய மனிதர்கள்; மகர நீரை - மகர மீன்கள் உலாவும் கடல் நீரை; நொய்தினின் அடைத்து - எளிதாக அடைத்து; மானத் தானையான் - வீரமிக்க படையோடு; நுவன்ற நம்மூர் எய்தினர்- கூறப்படும் நம் இலங்கை மாநகரை அடைந்து விட்டனர் என்றபோதின் - என்றாகிவிட்ட இந்தப் பொழுதில்; வேறு இனி எண்ண வேண்டும் - போருக்குப் புறப்படல் அன்றி வேறு இனி நாம் சிந்திக்க வேண்டும்; செய்திறன் உண்டோ - செயல்கள் (எவையேனும்) உள்ளனவோ? என்ன - என்று இராவணன் வினாவ; சேனை காப்பாளன் - சேனைக்குக் காவலன்; செப்பும் - உரைக்கத் தொடங்குவான்.
முன்பு (53) சேனை காவலன் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது இடையே ஒற்றர்கள் வருகை உரைக்கப்பட்டதால் தடைப்பட்ட அவன் உரையைத் தொடர வாய்ப்பளிக்கின்றான் இராவணன் என்க. நாடகபாணியில் கதையினை நடத்திச் செல்லும் கம்பர் பெருமானின் திறத்திற்கு இப்பகுதி மேலும் ஒரு சான்று. அருளில் கூறினும் வெகுளியில் கூறினும் கூறிய பொருளை அப்போதே பயந்துவிடும் (திருக்கு. பரிமே. 28) திறனுடையவை. நிறைமொழி மாந்தர் சொற்கள் ஆதலின், “வைதெனக் கொல்லும் வில்” என்றார் வைதல் - சாபமிடல். "சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்" (388) எனவும், "வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்" (7841) எனவும், "வைதால் அன வைதாயின வடிவாளி" (7177) எனவும் வில்லின் வேகத்திற்கும், தப்பாமற் சாய்ப்பதற்கும் சான்றோர் சொல்லைக் கவிஞர் உவமையாக்கியிருப்பது காணலாம். ”வைதெனக் கொல்லும் விற்கை மானிடர்" என அவனை அறியாமல் உரைத்து விட நேர்ந்தது. ஒற்றர் உரைத்த உரையின் தாக்கம் அவன் உளத்தை நிலை குலையச் செய்ததனால் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The men with bows in hand, who kill as surely as a curse, the sea of sea-beasts
- have easily dammed, and with a proud army have reached this city of ours;
- now that they have come, is there anything else to think about,
- any course to take?' he asked; and the guardian of the army replied.
What the poem says
The spies' report has broken off the war council. Irāvaṇaṉ now turns back to the commander of his army, who had been speaking when the spies arrived, and asks whether anything remains to be decided except going to war.
The image of bows that kill like a curse is a recurring one in the epic. The word of great sages works at once and cannot miss, and Irāmaṉ's arrows are like that. Irāvaṇaṉ lets this praise slip almost without meaning to, a sign of how shaken he is by the report.