கம்பராமாயணம் 6856 · யுத்த 9.3

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்டு சென்று அரிகேளாடு மனிசரை அமரில் கொன்று
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேல் கொண்டோமேல்,
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ?
வேண்டியது எய்தப் பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ!

பொருள் · Meaning in Tamil

ஆண்டு சென்று - பகைவர் இருக்கும் இடத்திற்கே சென்று; அரிகளோடும் மனிதரை - வானரப்படைகளோடு அம்மானிடர் இருவரையும்; அமரில் கொன்று - போர் செய்து கொன்று; மீண்டு நம் இருக்கை சேர்தும் - மீளவும் நம் இருப்பிடம் சேர்வோம்; என்பது மேற்கொண்டேமேல்- என்று முன்பு முடிவு மேற்கொண்டோமெனின்; ஈண்டு வந்து இறுத்தார் - (இன்று, அப்பகைவர்களே) இங்கு நம்மை நோக்கி வந்தடைந்தார்; என்னும் ஈது அலால் உறுதியுண்டோ? - என்கின்ற இச்செய்தி யல்லால் நமக்கு இப்போது உறுதி தரும் செய்தி உண்டோ? வேண்டியது எய்தப் பெற்றால் - (நாம் வேண்டியது இதுவேயாம்) நாம் விரும்பியதே கிடைக்கப் பெற்றோம் என்றால்; (அது) வெற்றியின் விழுமிது அன்றோ? - நாம் இனிப் பெறவிருக்கும் வெற்றியிலும் சிறந்தது அன்றோ?

பகைவர் இருக்குமிடம் நோக்கிச் சென்று தாக்குதல் நடத்திக் கொல்வோம் என்று முன்பு இராவணன் மந்திரப் படலத்தில் (27, 37,41) பேசப்பட்டது. இப்போது அவர்களே இங்கு வந்துவிட்டார்களென்றால் நமக்கு மிகவும் வசதிதானே? இனிப் போர் செய்து வெல்லவேண்டியது தானே என்பது கருத்து. "நெடும் புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலுள் நீங்கின் அதனைப் பிற” (குறள் 495) என்பவாகலின், நம்மிடம் நோக்கி அவர் வந்துள்ளது நமக்குப் பேருறுதி பயக்கும் என்பான், "ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அல்லால் உறுதியுண்டோ?” என்றான். பகைவர்களை நம் எல்லைக்குள் கொண்டுவரல் நமக்கு வெற்றி. அது கிட்டி விட்டது. வெற்றிக்குப் பின் கிட்ட வேண்டிய பயன் இப்போதே கிட்டி விட்டதாதலின் "வெற்றியின் விழுமிது அன்றோ?” என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To go there and kill the men, along with the monkeys, in battle,
  2. and come back to our seat — if that was what we had resolved,
  3. then that they have come here and camped — what could reassure us more?
  4. If what we wished for comes to us of itself, is that not better than victory?

What the poem says

The commander argues that the enemy's arrival is good news. In the earlier council the demons had planned to march out, find the enemy and kill them. Now the enemy has saved them the trouble by coming to Ilaṅkai.

He is drawing on the idea that a fighter is strongest on home ground, just as the crocodile wins in deep water but loses once it leaves it. Bringing the enemy into their own territory is already half the victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭuc ceṉṟu arikaḷōṭum maṉitarai amaril koṉṟu
mīṇṭu nam irukkai cērtum eṉpatu mēṟkoṇṭēmēl,
īṇṭu vantu iṟuttār eṉṉum ītu alātu uṟuti uṇṭō?
vēṇṭiyatu eytap peṟṟāl veṟṟiyiṉ viḻumitu aṉṟō!