கம்பராமாயணம் 6857 · யுத்த 9.4

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே! ஆயிரம் வெள்ளம் ஆன - ஆயிரம் வெள்ளம் என்னும் எண்ணிக்கை கொண்ட, அரக்கர் தம் சேனை - அரக்கர்களுடைய சேனையானது; தேயினும் நூறு ஊழிவேண்டும் - (பகையால்) அழிவதானாலும் நூற்றுக்கணக்கான ஊழிக் காலங்கள் வேண்டியிருக்கும்; சிறுமை என்னோ? - (அப்படியிருக்கவும்) தாழ்வுணர்ச்சி நமக்கு எதற்காக? நீ உருத்து - நீ வெகுண்டு; எழுந்தபோது - (போருக்கு எழுகின்ற போது; நாய் இனம் - நாய்களின் கூட்டம்; சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் - சிங்கத்தைக் கண்டது என்னுமாறு (இசை கெட்டு) ஓடிச் சிதைவது அன்றி; குரங்கு எதிர் நிற்பது உண்டோ? - இக்குரங்குகள் எதிர் நிற்கும் தரம் உடையனவோ? (இல்லையென்றபடி)

வெள்ளம் - படையளவு குறிக்கும் பேரெண். இதன் விளக்கத்தினை 3831 ஆம் பாடல் உரையில் காண்க. அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம் கொண்டது என்பது இதனால் புலப்படும். வானரச் சேனை எழுபது வெள்ளம் மட்டுமே கொண்டது என்பது. வெள்ளம் ஏழு பத்து உள (3831) "எழுபது வெள்ளம் சேனை வானரர்" (10235) என்பதனால் அறிக. அரக்கர் படை அழிந்தது என்று வைத்துக்கொண்டாலும் யுகங்கள் நூற்றுக்கணக்காக ஆகும். இந்த ஆயிரம் வெள்ளமும் அழிய, நூற்றுக்கணக்கான யுகங்கள் ஆகும் எனப் படையின் பெருமையும் வீரமும் ஒருங்கே சுட்டுவான், "தேயினும் ஊழி நூறு வேண்டும்” என்றான். இக்கணக்கை வீடணன் இராம பிரானுக்கு மொழிவதும் காண்க. சிங்கம் நாய் இனத்தோடு போரிடத் தேவையில்லை. சிங்கம் எழுவதே அவை சிதறி ஓடப்போதுமானது என்பான். "நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ?" என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sire, the army of the demons, a thousand veḷḷam strong,
  2. even if it were being worn away, would take a hundred ages to destroy; why think small?
  3. Other than to behave like a pack of dogs that has seen a lion,
  4. when you rise up in anger, will a monkey stand against you?

What the poem says

The commander boasts of the army's size. A veḷḷam is a vast unit for counting troops. The demons have a thousand of them, while the monkeys, as the epic says elsewhere, have only seventy. Even if the demon army were being destroyed, it would take a hundred ages to wipe it out.

A lion does not need to fight a pack of dogs; it only has to stand up and they scatter. In the same way, he says, the monkeys will run once Irāvaṇaṉ rises in anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram veḷḷam āṉa arakkartam tāṉai aiya!
tēyiṉum ūḻi nūṟu vēṇṭumāl; ciṟumai eṉṉō?
nāyiṉam cīyam kaṇṭatām eṉa naṭappatu allāl
nī uruttu eḻunta pōtu, kuraṅku etir niṟpatu uṇṭō?