கம்பராமாயணம் 6859 · யுத்த 9.6

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 “
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1மதி நெறி அறிவு சான்ற மாலியவான், “ நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் புலமை ‘என்னா,
‘விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும், மீண்டு
செது நெறி நிலையினாரே ‘ என்பது தெரியச் சொல்லும்.

பொருள் · Meaning in Tamil

மதி நெறி அறிவு சான்ற மாலியவான் - யாவராலும் மதிக்கத்தக்க அற நெறியிற் செல்லும் அறிவு நிறைந்த மாலியவான்; நல்வாய்மை - சிறந்த சத்திய வாசுங்கள்; பொது நெறி நிலையது - உலகிற்குப் பொதுப்படக் கூறியுள்ளவை; ஆகப் புணர்த்துதல் புலமைத்து - (ஆனாலும்) (அவற்றை) தம் வாழ்விற்கேற்குமாறு கூட்டிப் பயன்கொள்ளுதலே அறிவுடைய வழி; என்னா - என்று எண்ணி; விதி நெறி நிலையது - விதிவழியால் பகைவர்கள் அழிய எதிர் நிற்பது; ஆக விளம்புகின்றோரும் - என்று விளம்புகின்ற பிரகத்தன் முதலியோரும்; ஈண்டுச் செது நெறி நிலையினோரே என்பது தெரியச் சொல்லும் - இங்கு அழியும் நெறியில் (செல்ல) நிற்பவரே என்பதனை (இராவணனுக்கு) விளங்குமாறு சொல்லத் தொடங்குவான்.

சேற்றிற் பிறந்த செந்தாமரை போன்று, இலங்கையில் அறம் உரைக்கும் திறம் வாய்ந்தவன் என மதிக்கத்தக்க அறிவு சான்றவன் ஆதலின், "மதி நெறி அறிவு சான்ற மாலியவான்” என்றார். ஆகப் புணர்த்துதல் - நமக்கு ஆகுமாறு கூட்டிக் கொள்ளுதல். புலமைத்து - அறிவின் பாலது. செதுத்தல் - சிதைவுறல், அழிதல், செத்தை என்பதும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Māliyavāṉ, whose wisdom keeps to the path of right, holding that 'good truths,
  2. though they stand as common precepts, are wisely used only when applied to oneself,'
  3. made it plain that even those who speak as though fate stood with them
  4. are in truth standing on the road to ruin.

What the poem says

Now Māliyavāṉ speaks. He is Irāvaṇaṉ's aged grandfather on his mother's side and the one voice in the court for righteousness, like a red lotus growing out of mud.

He believes that moral truths are general rules, and that the wise apply them to their own case. So he sets out to show the king that the commander and the others who talk confidently of destiny being on their side are actually headed for destruction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mati neṟi aṟivu cāṉṟa māliyavāṉ, “ nal vāymai
potu neṟi nilaiyatu ākap puṇarttutal pulamaittu ‘eṉṉā,
‘viti neṟi nilaiyatu āka viḷampukiṉṟōrum, mīṇṭu
cetu neṟi nilaiyiṉārē ‘ eṉpatu teriyac collum.