கம்பராமாயணம் 6860 · யுத்த 9.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாசு அற்ற சோதி வெள்ளத்து - களங்கம் அற்ற தூய ஒளி வெள்ளத்தின்; உச்சியின் வரம்பில் தோன்றும் - பரம பதம் எனும் பெருவெளியின் எல்லையில் காட்சிப் படுபவனாகிய, ஈசற்கும் ஈசன்- தெய்வத்திற்கெல்லாம் தெய்வமாகிய முழுமுதற் கடவுளே; பொருதிரைப் புணரிவேலி - தரையினை ஓயாது தாக்குகின்ற அலைகளையுடைய கடலினை எல்லையாகவுடைய; தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக - பூமிக்குத் தலைவனான தசரதன் மைந்தனாக; பூசற்கு முயன்று வந்தான் - நம்முடன் போரிட முயன்று (அவதாரம் எடுத்து) வந்துள்ளான்; என்பது ஓர் வார்த்தை இட்டார்- என்கின்ற ஒரு வார்த்தையை (பலரும்) பேசிக் கொள்கின்றனர்
தசரதன் என்பது மோனையின்பத்திற்காகத் தெசரதன் என வந்தது. பரமபதத்தின் நாயகன் ஒரு சிறுவனாய்ப் பிறந்துள்ளது நம்மைப் போரிட்டு அழிப்பதற்காக என்று பேசிக் கொள்கிறார்கள். சிந்திப்பது உன் கடன் என அறிவுறுத்துகின்றான் மாலியவான். பிரபஞ்ச வெளியில் உன் இலங்கைத் தீவு ஒரு சிறு புள்ளியாம் என்று சொல்லாமற் சொல்லிச் சிந்திக்க வைக்கின்ற திறம் காண்க. கர்ம பூமிபோலே தமியாயிருக்கையன்றிக்கே தெளிவிடும்பாயிருக்கை" (ஸ்ரீ வைகுண்ட கத்யம். சூரணை: 3) யாகையாகிய பரம பதத்தை "மாசற்ற சோதி வெள்ளம்” என்றார். நித்திய விபூதியெனப்படும் பரமபதம், "ஆத்மாவையும் அறிவையும் போலே தானே பிரகாசிப்பது. அதனால், சுயம்பிரகாசம், ஞானமயம், அஜடம்” (யதீந்திர மததீபிகை - காரிகாவளி, நித்யவி, பிர்) எனப்படுவதால் அதனை, "மாசற்ற சோதி" என்றார் எனினுமாம். அந்த நித்ய விபூதியில் ஸ்ரீ வைகுண்டம் என்னும் பெயருள்ளதொரு பெரிய திவ்யநகரம் பன்னிரண்டு ஆவரணங்களாலே (மதில்கள் சூழப்பெற்றதாய் விளங்குகின்றது. அதன் உச்சியில் உள்ள திருவோலக்க மண்டபத்தில் இறைவன் கொலுவீற்றுள்ளான் (மேற்படி நூல்: பகச 14) என்பது பற்றி, "சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் வைகும் ஈசற்கும் ஈசன்" என்றார் எனினுமாம். கவந்தன் வாயிலாய் (3686) இப்பரம பதமாட்சியைக் கவிஞர் பிரான் உரைத்துள்ளதும் ஒப்பு நோக்கல் ஆகும். ஈசற்கும் ஈசன் - தேவாதி தேவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Striving for battle against us, as the son
- of Tacarataṉ, lord of the land whose fence is the sea of pounding waves,
- he who appears at the furthest summit of the flood of spotless light,
- the Lord even of lords, has come' — that is the word people are spreading.
What the poem says
Māliyavāṉ reports what people are saying. Irāmaṉ, born as the son of King Tacarataṉ, is the supreme God himself. He has come down from his highest heaven to make war on the demons. The Tamil spells the father's name Tecarataṉ here for the sake of alliteration.
The flood of spotless light is Vaikuṇṭha, Viṣṇu's eternal realm. Vaiṣṇava texts describe it as shining by its own light and the Lord as enthroned at its height. Māliyavāṉ does not argue the point outright; he passes on the rumour and leaves Irāvaṇaṉ to think about it.