கம்பராமாயணம் 6861 · யுத்த 9.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னவற்கு இளவல் தன்னை - அந்தத் தசரத குமாரனாகிய இராமனின் தம்பியாகிய இலக்குவன்; அருமறை - உணர்தற்கரிய வேதங்கள்யாவும்; பரம் என்று ஓதும் நன்னிலை நின்று தீர்ந்து- பரத்துவம் என்று சிறப்பித்துச் சொல்லும் அந்த உயர்கதியிருந்து நீங்கி; நவையிலா உயிர்கள் - குற்றமற்ற உயிர்கள் யாவற்றின் உள்ளும்; தொல் நிலை பிரிந்தான் என்ன - தனது பழமையான பரத்துவ நிலையிலிருந்து மாறுபட்டுவிட்டான் என்று; பலவகை நின்ற தூயோன் - கூறுமாறு பல்வேறு வகையாக அவதரித்து நின்ற தூய்மை மாறாதவன் (ஆகிய பரம்பொருளின்; இன் அணை என்ன - இனிய படுக்கையாகிய (ஆதி சேடன் என்று), யாரும் இயம்புவர் - எல்லோரும் கூறுவர்; ஏது யாதோ? - இதன் காரணம் என்னவோ?
இறைவனின் ஐந்து நிலைகளுள் பரம், வியூகம், விபவம் (அவதாரம்), அந்தர்யாமித்துவம், அர்ச்சை என ஓதப்படுமவற்றுள் முதல் நிலை பரத்துவம் ஆதலின், "அருமறை பரம் என்று ஓதும் நன்னிலை” என்றார். "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” (தொல். மரபி. 83) இறைவன் ஆதலின், அவன் எத்தகைய பிறவியெடுப்பினும் அப்பிறவிக்குரிய மாசுகள் அவனைப் பற்றா; ஆனால், உலகினரின் கண்ணுக்கு அவ்வாற்றல் புலப்படாது போய், கன்ம வயப்பட்டவன் போல் தோன்றுவன் என்பது தோன்ற, "தொன்னிலை பிரிந்தான் என்ன உயிர்கள் தோறும் பலவகை நின்ற தூயோன்" என்றார் "தொன்னிலை பிரிந்தான் என்ன நின்ற தூயோன்" என்பதனாலேயே தொல்நிலை பிரியாமை பெறப்பட்டது. ஆத்மாவிற்கு இன்பதுன்பங்கள் இல்லாமல் இருக்கவும், இச்சரீரத்தினுடைய சேர்க்கையால் அவை உண்டாகின்றன. அப்படி இறைவனுக்கும் இச்சரீரச் சேர்க்கையால் இன்பதுன்பங்கள் கூடாவோ எனின் கூடா. அதற்குக் காரணம் உட்புகுவதற்கு உளதாய காரண விசேடம். ஆத்மா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது. இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்தில் சிறையனும் கிடந்தான்; அரச குமாரனும் கிடந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாய் இருந்தது" (திருவாய் ஈடு. 3: 4: 10;) எனும் நம்பிள்ளையின் அரிய உரை இங்கு கருதத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His younger brother: 'Of the Pure One who, from the high state the rare Vedas name the Supreme,
- came down, and in every faultless creature
- stood in many forms, as though he had parted from his ancient state,
- he is the sweet couch' — so all declare; what could the reason be?
What the poem says
Māliyavāṉ goes on to Ilakkuvaṉ. People say that Irāmaṉ's younger brother is Ātiśeṣa, the serpent on which Viṣṇu sleeps, now born as a man.
Viṣṇu takes many forms and enters into all beings. To the world he may seem to have left his supreme state, but he never really leaves it. The commentary explains this with a classic Vaiṣṇava image: a prisoner and a prince may both be inside a jail, but the prisoner is there because of his deeds and suffers, while the prince is there by choice and is untouched. God takes bodies by grace, not because of karma.