கம்பராமாயணம் 6862 · யுத்த 9.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வவர்க்கு - அந்த இராம இலக்குவர்க்கு; அமைந்த வில்லும் - பொருந்திய விற்படைகளும்; குலவரை அவற்றின் ஆன்ற - சிறந்த மலைகளின் கண் உள்ள; வெவ்வலிவேறு வாங்கி - கொடிய வன்மையைத் தனியாகப் பிரித்தெடுத்து; விரிஞ்சனே மேல் நாள் விதித்த - நான்முகனே முன்பு செய்தமைத்தன; செவ்வழி நாணும் சேடன் - அவ்வில்லில் நேரிய நெறியிற் கட்டப்பட்ட நாண் கயிறும் ஆதிசேடன்; தெரிகணை ஆகச் செய்த - ஆய்ந்தெடுத்த அம்பாகச் செய்யப்பட்ட; கவ்வு அயில் - கவ்வும் தன்மையுள்ள கூரிய முனையும்; கால நேமிக் கணக்கையும் கடந்தது - காலச்சக்கரத்தின் கணிக்கும் தன்மையையும் மீறியது; என்பார் - என்று மொழிவர்.
குலவரை - சிறந்த மலை. குலம் சிறப்புக் குறித்து நின்றது. அவற்றின் வலிமையை மட்டும் பிரித்தெடுத்துச் செய்யப்பட்டன. இருவர் விற்களும் என்பது கருத்து. "துளக்கலாகா நிலையும் தோற்றமும்” (நன். பொதும்) மலைக்குரியன வாதலின், இருவர் வில்லும் அத்தகைய ஆற்றல் உடையனவாயின. அயில் - அம்பின்கூர் முனை. காலநேமி - காலசக்கரம். காலச்சக்கரம் தடையற்று எவ்விடத்தும் ஊடுருவிச் செல்வது போன்று, அவர்தம் அம்பு முனையும் எங்கும் எவர்மாட்டும் தடையின்றிப் பிளந்து செல்லும் என்பான், "காலநேமிக் கணக்கையும் கடந்தது" என்றான். கால நேமி என்பது, எதிர்த்தார்க்கு இறுதியைக் காட்ட வல்ல திருமாலின் சுதர்சனச் சக்கரத்தைக் குறித்தது எனினுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The bows that suit each of them — from the great clan mountains
- drawing out their fierce strength apart, Viriñcaṉ himself shaped them long ago;
- the bowstring, strung true, is Cēṭaṉ; the biting points made into chosen arrows
- pass beyond even the reckoning of the wheel of time' — so they say.
What the poem says
Māliyavāṉ describes the weapons of the two brothers as people report them. Brahmā (Viriñcaṉ) made their bows by drawing out the strength of the great mountains, which never shake. The bowstring is the serpent Ātiśeṣa. Their arrowheads pierce anything, outrunning even the wheel of time, which passes through everything unhindered.
The phrase can also be read as a reference to Viṣṇu's discus Sudarśana, which brings an end to all who oppose it.