கம்பராமாயணம் 686 · பால 10.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புண்டரீகனும் - தாமரையில் வாழும் பிரமனும்; புள் திருப் பாகனும் - கருடனுக்குச் சிறந்த பாகனாகிய திருமாலும்; குண்டை ஊர்தியும் - காளை வாகனத்தையுடைய சிவனும்; குலிசியும் - வச்சிரப் படையுடைய இந்திரனும்; மற்று உள அண்டர்தாமும் - மற்றுமுள்ள தேவர்களும்; வேறு வந்து அவ்வயின் எய்த - தனித் தனியாக வந்து அவ்விடத்தில் சேர்ந்து; எண் தபோதனன் தன்னை - யாவராலும் மதிக்கப்படும் தவச் செல்வனான முனிவனை; எதிர்ந்தனர் - சந்தித்தார்கள்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களின் முறைமைப்படி பிரமன், திருமால், சிவன் என்று வைத்தார். புள் - பறவைக்கு அரசாகிய கருடன். குண்டை ஊர்தி - பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Lotus-born, the noble rider of the bird,
- he whose mount is the bull, the wielder of the thunderbolt, and all the other
- celestials came each on his own to that place
- and met the esteemed ascetic face to face.
What the poem says
Brahmā, Viṣṇu who rides Garuḍa, Śiva whose mount is the bull, Indra with his thunderbolt and all the other gods come to Kaucikaṉ where he sits in penance. The three great gods are named in the order of their functions: creation, preservation and destruction.