கம்பராமாயணம் 687 · பால 10.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மா பாதி மதி சூடியும் - கலை குறைந்த சிறந்த பிறைச் சந்திரனைச் சூடிய சிவனும்; பைந்துழாய் - பசுமையான திருத்துழாய் அணிந்த; சோதியோனும் - சோதியான திருமாலும்; அத் தூய்மலர் ஆளியும் - தூய தாமரை மலரில் உறையும் பிரமனும் (ஆகிய மும்மூர்த்திகளும்); மா தபோதன - (அம் முனிவனை நோக்கி) சிறந்த தவச் செல்வனான பெருமுனிவனே; வேத பாரகர் - வேதங்களின் கரை கண்டு உணர்ந்தவர்; நீஅலால் வேறு இலர் - உன்னை அல்லாமல் (உலகில்) வேறு யாரும் இலர்; என்ன வழங்கினர் - என்று உபகார மொழி கூறிப் புகழ்ந்தார்கள்.
'வேத பாரகனும் மாதபோதனனும் நீயே' என்றதனால் 'பிரம இருடியே நீ' என்பது விளங்கும். திருமகள் வாழும் இடமாதலின் தாமரை மலர் தூய்மலர் எனப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who wears the great half-moon, the radiant one
- with fresh tulasi, and the lord of that pure flower
- declared, 'There is none who has crossed the Vedas
- but you, O great ascetic!'
What the poem says
Śiva, who wears the crescent moon, Viṣṇu, radiant with his garland of fresh tulasi, and Brahmā, who dwells on the pure lotus, praise Kaucikaṉ as the only one who has mastered the Vedas completely. By calling him a master of the Vedas and a great ascetic, they implicitly confer on him the rank of brahmarṣi, the highest order of sage.