கம்பராமாயணம் 688 · பால 10.136

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
'சென்னி தாழ்த்து, இரு செம் கமலம் குவித்து,
உன்னும் நல் வினை உற்றது,' என்று ஓங்கினான்;
துன்னு தேவர், தம் சூழலுள் போயினார்.

பொருள் · Meaning in Tamil

அன்ன வாசகம் - (பெருந்தேவர்களின்) அந்த வார்த்தைகளை; கேட்டு உணர் - செவிகளில் கேட்டு அறிந்த; அந்தணன் - கௌசிக முனிவன்; சென்னி தாழ்ந்து - தலைவணங்கி; இரு செங்கமலம் குவித்து - தாமரை போன்ற இரு கைகளையும் கூப்பி; உன்னும் நல்வினை - யாவராலும் கருதப்படுகின்ற நல்ல தவப்பயன்; உற்றது - (எனக்கு வந்து) பொருந்தியது; என்று ஓங்கினான் - என்று பூரிப்படைந்தான்; துன்னு தேவர் - (பின்பு) அங்கு வந்து சேர்ந்த தேவர்களும்; தம் சூழலுள் - தத்தம் இடத்திற்கு; போயினார் - சென்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The brahmin, hearing and understanding those words,
  2. bowed his head, joined his two red lotus hands,
  3. and rose in joy, saying, 'The good fruit I longed for has come';
  4. and the gods who had thronged there went back to their own realms.

What the poem says

Hearing the gods' words, Kaucikaṉ — now truly a brahmin sage — bows his head, folds his hands and swells with joy that the reward he sought has come at last. The assembled gods return to their abodes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa vācakam kēṭṭu uṇar antaṇaṉ,
'ceṉṉi tāḻttu, iru ceṅkai malar kuvittu,
uṉṉu nal viṉai uṟṟatu,' eṉṟu ōṅkiṉāṉ;
tuṉṉu tēvartam cūḻaluḷ pōyiṉār.