கம்பராமாயணம் 6864 · யுத்த 9.11

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1“‘அப்பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் வேர் அறுப்பதாக
இப்பதி எய்தினான் அவ் இராமன் ‘‘ என்று எவரும் சொன்னார்;
ஒப்பினால் க்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ?
செப்பி என்? “குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் ‘என்றார்.

பொருள் · Meaning in Tamil

அப்பதம் - அந்தப் பிரம பதவியை; அவனுக்கு ஈந்தான் அவ் இராமன் - அந்த அநுமனுக்குத் தந்தவன் ஆகிய இராமபிரான்; அரக்கர் வேர் அறுப்பதாக - அரக்கர்களை வேரொடு அழிப்பதற்காக; இப்பதி எய்தினான் - இந்த இலங்கையை (இப்போது) அடைந்துள்ளான்; என்று எவரும் சொன்னார் - என்று எல்லோரும் இயம்புகின்றனர்; ஒப்பினால் உரைக்கின்றாரோ? - அவ்வாறு அவர்கள், வெறும் ஒப்புக்காக உரைக்கின்றார்களோ? உண்மையே உணர்த்தினாரோ? - அன்றி, உண்மையைத் தான் உணர்த்துகின்றார்களோ? குரங்காய் வந்தார் - வானரங்களாக வடிவெடுத்து வந்தவர்கள்; தனித்தனி தேவர் என்றார் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவர்கள் என்கின்றார்கள்; செப்பி என்? - (இவற்றையெல்லாம் (இப்போது) சொல்லி என்ன பயன்?

"விரிஞ்சனாம் இனிமேல்” என மேற்பாடலில் குறித்த பிரமபதத்தை, "அப்பதம்" என்று அநுவதித்தார்; பிரமபதம் இராமனால் அளிக்கப்படும் என்பதனை, உத்தர காண்ட அநுமப் படலத்தில் பிரமனும் உரைப்பான்:

"வன்னிய சகாய நின்மைந்தன் வையத்தோர்க்கும் வானோர்க்கும் இன்னல் செய்யும் இராவணன்தன் இலங்கை நகரை எரியூட்டி, மன்னன் இராமன் மனம் உவப்ப வயவாள்அரக்கர் குலம் அறுத்துப் பின்னை அவன்தன் பேரருளால் பிரமபதமும் பெறும் என்றான்" (உத்தர. அநுமம் : 40)

அரக்கர்களை அழிப்பதற்காக, அனுமனுக்குப் பிரமபதம் கொடுத்த பரமபதநாதனே இராமனாகப் பிறந்து இலங்கை நோக்கி வந்துள்ளான் என்பதனை, உன்னையொழிய எல்லோரும் உணர்ந்துள்ளனர் என்பான், "எவரும் சொன்னார்” என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That Irāmaṉ, who granted him that station, to cut the demons off at the root
  2. has come to this city' — so everyone says;
  3. are they speaking in mere comparison? Or are they telling the truth?
  4. Why say more? "Those who came as monkeys are gods, each one," they say.

What the poem says

The station is Brahmā's, which the previous verse said Aṉumaṉ will one day hold. A later tradition has Brahmā himself say that Aṉumaṉ will earn it by the grace of Irāmaṉ after burning Ilaṅkai and destroying the demons.

Māliyavāṉ's point is pointed: the supreme God who grants such ranks has come in person to root out the demons, and everyone except Irāvaṇaṉ seems to know it. Whether people say this as flattery or as truth, they also say that every monkey in the army is some god in disguise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘ap patam avaṉukku īntāṉ, arakkar vēr aṟuppatāka
ip pati eytiṉāṉ av irāmaṉ ‘‘ eṉṟu evarum coṉṉār;
oppiṉāl uraikkiṉṟārō? uṇmaiyai uṇarttiṉārō?
ceppi eṉ? “kuraṅkāy vantār taṉit taṉit tēvar ‘eṉṟār.