கம்பராமாயணம் 6865 · யுத்த 9.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயது தெரிந்தோ? - (இவ்வாறு உலகோறி ஆராய்ந்து அறிந்து கூறுகின்றார்களோ? தங்கள் அச்சமோ? - அன்றித் தங்கள் அச்சம் காரணமாகக் கூறுகின்றார்களோ?; அறிவோ? - அறிவால் அறிந்து கூறுகின்றார்களோ? (எவ்வாறாயினும்), தூயவள் - இராமனின் மனைவியாகிய அத்தூய சீதை; அமிழ்தினோடும் தோன்றினாள் என்றும் - கடல் கடைகையில் அமுதோடு தோன்றிய திருமகளாவாள்; உலகுக்கு எல்லாம் - உலகங்கள் அனைத்துக்கும்; தோன்றாத் தாய் அவள் - கண்ணுக்குத் தோன்றாத அன்னை ஆவாள் அவளே; யார்க்கும் சேயவள் - உலகோர் யாவருக்கும் எட்டாப் பரமபதத்தில் வாழும் பெரிய பிராட்டி அவள் ஆவாள்; எளியள் என்னா - (நம் கண்ணுக்குப் புலப்பவதால்) எளியவள் என்று; சிந்தையின் இகழல் - மனத்தால் இகழற்க; என்பதும் சாற்றுகின்றார் - என்றும் உரைக்கின்றார்கள்.
பிறக்கும் போதே மணத்தோடு தோன்றும் துழாய் என்பது போல, தோன்றும் போதே பிராட்டி அமிழ்தோடு தோன்றினாள் என்பார், "தூயவள் அமிழ்தினோடுந் தோன்றினாள்” என்றார் இப்பாடல், பூட்டுவிற் பொருள் கோளாம். "ஆயது தெரிந்தோ?" என்பதற்கு, முற்பாடலில் குறிப்பிட்டுள்ளபடி, தேவர்கள் யாவரும் வானரர் "ஆயது தெரிந்தோ?" எனவும் உரைக்கலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Do they say it from knowing what has come about? From their fear? From insight? 'She who is beyond the reach of all —
- do not think her lowly and scorn her in your mind!
- The pure one rose together with the nectar; she is the unseen
- mother of all the worlds' — this too they declare.
What the poem says
Māliyavāṉ turns to Cītai. People say she is Lakṣmī, the goddess who rose from the churned ocean together with the nectar of immortality, the invisible mother of all worlds. She lives in the highest heaven beyond anyone's reach. Irāvaṇaṉ should not think her an ordinary woman to be treated lightly just because she is in his power.
Just as the tulasi plant is fragrant from the moment it sprouts, she was born together with the nectar. Māliyavāṉ wonders whether people say all this from real knowledge, from fear, or from wisdom. Either way, the warning is plain.