கம்பராமாயணம் 6867 · யுத்த 9.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈங்கு - இவ்விலங்கை நகருக்கு; ஆயிரம் உற்பாதங்கள் - ஆயிரமாயிரம் கெடுகுறிகள்; வந்து அடுத்த என்றார் - வந்து நிகழ்ந்துள்ளன என்றார்கள்; தாயினும் உயிர்க்கு நல்லாள் - அன்னையைக் காட்டிலும் உயிர்க்குலத்துக்கு அன்பு செய்யும் நல்லவளாகிய சீதை; இருந்துழி அறிய - இருக்கும் இடத்தை யறிந்து கொள்ள; தக்கோன் - தகுதியில் சிறந்த இராமபிரான்; ஏயின தூதன் - அனுப்பிய தூதனாம் அனுமன்; எற்ற - தாக்கியதனால்; பற்று விட்டு - காவல் தொழிலை நீத்து; இலங்கைத் தெய்வம் போயினது - இலங்கையின் காவல் தெய்வமாகிய இலங்கிணியும் (இலங்கையை விட்டு) நீங்கி விட்டாள்; என்றும் சொன்னார் - என்பதும் உரைத்தார்கள்; "புகுந்தது போரும் என்றார்" - யுத்தம் (இலங்கைக்குள்) (அனுமன் வடிவில்) நுழைந்து விட்டது என்றும் சொன்னார்கள்.
உலகத்தாய் உயிர்கட்கு, ஒரு பிறப்புக்கே அன்பு காட்டுவாள்; பிராட்டி பிறவி தோறும் அன்பு காட்டிப் பேணும் பெருந்தாயாம் உலோகமாதா ஆதலின் "தாயினும் உயிர்க்கு நல்லாள்” எனப்பட்டாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'A thousand evil omens have come upon this place,' they said;
- 'She who is kinder to living things than a mother — to learn where she was, the worthy one
- sent an envoy, and when he struck, letting go her hold, the goddess of Ilaṅkai
- has departed,' they also said; 'and war has already come in,' they said.
What the poem says
Māliyavāṉ lists the signs of doom. Countless evil omens have appeared in the city. When Aṉumaṉ came looking for Cītai, he struck down Ilaṅkiṇi, the guardian goddess of the city, and she abandoned her post. With that, people say, the war has in effect already entered Ilaṅkai.
Cītai is called kinder than a mother: a mother loves her child for one lifetime, while the mother of the world cares for creatures through every birth.