கம்பராமாயணம் 6868 · யுத்த 9.15

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

நம் பரத்து அடங்கும் மெய்யன் - உடம்பால் நம் இனத்தைச் சார்ந்தவனும்; நாவினில் பொய் இலாதான் - (ஆனால், நம் நிலைக்கு மாறாக) நாவால் பொய்யே உரையாதவனும்; உம்பர் மந்திரிக்கும் மேலா - தேவர்களின் அமைச்சனான பிருகற்பதியைக் காட்டிலும் மேலாக; ஒரு முழம் உயர்ந்த - ஒரு முழம் உயர்ந்தவனும் ஆன; ஞானத் தம்பியே - (உன்) ஞானத் தம்பியாகிய வீடணனே; அரசொடும் அரக்கர் - அரசாளும் (இராவணனாகிய) உன்னோடும் சேர்ந்து (எல்லா) அரக்கர்களும்; அம்பினுக்கு இலக்கம் ஆவார் என்ன - (இராமபிரானின் கணைகளுக்கு இலக்காகி அழிவார்கள் என்று; சாற்றிப் போனான் - உரைத்து வெளியேறினான்; என்பதும் சமையச் சொன்னார் - என்னும் செய்தியையும் பொருந்தக் கூறினார்கள்.

பரம் - சார்பு, இனம். உடம்பால் நம் இனத்தவன் ஆயினும், நாவிலும் ஞானத்திலும் நமக்கு அப்பாற்பட்டவன் வீடணன் என்பது குறிப்பு. தேவர்க்கு அமைச்சனும் குலகுருவுமான பிருகற்பதி எனப்படும் வியாழபகவான் கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதி என்பது சோதிட நூல் துணிபு. அத்தகைய வியாழ பகவானிலும் ஒரு முழம் உயர்ந்த ஞானமுடையவன் வீடணன் என்று வீடணனின் கல்வியும் ஞானமும் கவிஞர் பிரானால் உச்சப்படுத்தப்படும் திறம் ஓர்க. அறவாழியந்தணனைச் சார்ந்த வீடணனின் ஞானம் ஞானத்தின் அதிபதியின் ஞானத்தைக் காட்டிலும் மேல் உயர்ந்தது என்பது கவிஞர் பிரானின் துணிபு. எப்படி யளந்தாலும் வீடணன் ஞானம் ஞானாதிபதியுடையதைக் காட்டிலும் ஒரு முழம் உயர்ந்தே இருக்கும் என்று வழக்காறுபட மொழிந்தார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"The demons, together with their king, will fall as targets to the arrows" —
  2. so the truthful one, counted among our own, with no lie upon his tongue,
  3. your brother, whose wisdom stands a cubit above the minister of the gods,
  4. declared before he left' — this too they told, and aptly.

What the poem says

Māliyavāṉ reminds Irāvaṇaṉ that Vīṭaṇaṉ predicted all this before he left. Vīṭaṇaṉ was a demon by birth, but in truthfulness and wisdom he stood apart from the rest of them.

The minister of the gods is Bṛhaspati, the planet Jupiter, traditionally the lord of learning and wisdom. Saying that Vīṭaṇaṉ's wisdom is a cubit higher is a way of saying that however you measure it, his wisdom always comes out ahead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘ampiṉukku ilakkam āvār aracoṭum arakkar ‘eṉṉa,
nam parattu aṭaṅkum meyyaṉ, nāviṉil poy ilātāṉ,
umpar mantirikkum mēlā oru muḻam uyarnta ñāṉat
tampiyē cāṟṟip pōṉāṉ ‘‘ eṉpatum camaiyac coṉṉār.