கம்பராமாயணம் 6869 · யுத்த 9.16

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஈது எலாம் உணர்ந்தேன் ஆயும், என்குலம் இறுதி உற்றது
ஆதியின் இவனால் என்றும், உன்தன் மேல் அன்பினாலும்,
வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன்,
சீதையை விடுதி ஆயின், தீரும் இத்தீமை ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஈது எலாம் யானும் உணர்ந்தேன் - இவ்வாறு பிறர் கூறிய யாவற்றையும் நான் அறிந்தேன் (ஆதலாலும், இவனால் - இத்திருமாலால்; என் குலம் ஆதியில் இறுதி உற்றது என்றும் - என்னுடைய அரக்கர் குலம் அழிவுற்றது என்ற காரணத்தாலும்; உன் தன்மேல் அன்பினாலும் - உன்மேல் நான் கொண்டுள்ள அன்பின் காரணத்தாலும்; நெஞ்சின் வேதனை எய்த - என் மனத்தில் எழுந்த துன்பத்தால்; வெம்பியான் விளைவ சொன்னேன் - (கொதித்து) வெதும்பி இனி விளையவுள்ளவற்றை நான் (உனக்குக் சொன்னேன்; சீதையை விடுதியாயின் - பிராட்டியைச் சிறையிலிருந்தும் விட்டு விட்டாயானால்; இச்சிறுமை தீரும் - உனக்கினி நிகழவுள்ள அத்தனை துன்பங்களும் விலகிவிடும்; என்றான்... - என்று கூறி முடித்தான் (மாலியவான்.

சீதையைச் சிறை வைத்திருப்பது, உன் போன்ற மாமன் புரிய உரிய செயல் அன்று; சிறிய செயல் என்பான். "தீரும் இச்சிறுமை” என்றான். சிறிய செயல்கள் துன்பமே நல்குமாதலின் சிறுமை துன்பத்தையும் குறித்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'All this I too have come to know; and because my clan was brought to ruin
  2. long ago by this very one, and out of love for you,
  3. with anguish come into my heart, burning, I have told you what will follow;
  4. if you set Cītai free, this evil will end,' he said.

What the poem says

Māliyavāṉ ends his advice. He has seen it all coming. In an earlier age Viṣṇu destroyed his own branch of the demon race, and he does not want the same to happen to Irāvaṇaṉ, whom he loves. Speaking in pain, he tells the king plainly that freeing Cītai will avert the disaster.

The commentary's reading of the last line calls the holding of Cītai a petty deed, unworthy of so great a king, and petty deeds bring only grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ītu elām uṇarntēṉ yāṉum; eṉ kulam iṟuti uṟṟatu
ātiyiṉ ivaṉāl eṉṟum, uṉtaṉmēl aṉpiṉālum,
vētaṉai neñciṉ eyta, vempi, yāṉ viḷaiva coṉṉēṉ,
cītaiyai viṭutiāyiṉ, tīrum it tīmai ‘eṉṟāṉ.