கம்பராமாயணம் 6870 · யுத்த 9.17

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மற்று எலாம் நிற்க, வந்த மனிதர் வானரங்கள், வானில்
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும், “தோற்றி நீ “ என்றும் சொன்னாய்
கற்றவா நன்று போ ‘என்று, இனையன கழறல் உற்றான்.

பொருள் · Meaning in Tamil

மற்று எலாம் நிற்க - (நீ உரைத்தவற்றுள்) மற்றைய செய்திகள் எல்லாம் (ஒருபுறம்) இருக்கட்டும்; அந்த மனிதர் வானரங்கள் - (என்னை நோக்கி) அந்த இராம லக்குவர், குரங்குகள்; வானில் இற்றை நாள் அளவும் - வானுலகில் இன்று வரையிலும்; நின்ற இமையவர் - (என்னை எதிர்க்க இயலாது பணிந்து) நின்ற தேவர்கள்; என்னும் தன்மை - என்னும் (இவர்களின்) இயல்புகளைச்: சொற்றவாறு அன்றியேயும் - சொன்னதோடு நிற்காமல்; "நீ தோற்றி - "நீ தோற்பாய்" என்றும் சொன்னாய் - என்றும் கூறினாய்; கற்றவா நன்று போ! - நீ கற்றுள்ள அரசியல் நூல்களின் திறம் நன்று போ! என்று இனையன கூறல் உற்றான் - (மேலும்) இத்தகைய மொழிகளைக் கூறத் தொடங்கினான்.

தேவர் மானுடர் வானரங்கள் ஆகியோர் தன்மைகளை மாலியவான் கூறியதைக் கேட்டுச் சகித்த இராவணன், "நீ தோற்பாய்” என்று கூறிய சொற்களுக்கு மட்டும் பொறுக்கமுடியாதவன் ஆனான் என்பது கருத்து. "என்னும் தன்மை” என்பதன் இடையே “இவர்கள்” எனும் சொல் பொருட்றெப்புக் கருதி வருவிக்கப்பட்டது. "கற்றவா நன்று போ!" என்பது கவிஞர் பெருமான் உயிராற்றலோடு உரையாடல்களை அமைக்குத் திறத்திற்கு மேலும் ஒரு சான்றாய் நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Let everything else be: that those men and monkeys
  2. are the immortals who until this day stood in heaven —
  3. not content with saying such things, you also told me, "You will lose";
  4. how well you have learned! Go!' — and he began to rebuke him thus.

What the poem says

Irāvaṇaṉ scorns his grandfather's advice. He could put up with Māliyavāṉ's talk about men, monkeys and gods in disguise, but not with the prediction that he will be defeated.

His sarcastic 'how well you have learned!' mocks the old man's knowledge of statecraft. The commentary praises the poet's gift for dialogue that feels alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟṟu elām niṟka, anta maṉitar vāṉaraṅkaḷ, vāṉil
iṟṟai nāḷ aḷavum niṉṟa imaiyavar eṉṉum taṉmai
coṟṟavāṟu aṉṟiyēyum, “tōṟṟi nī “ eṉṟum coṉṉāy
kaṟṟavā naṉṟu pō ‘eṉṟu, iṉaiyaṉa kaḻaṟaluṟṟāṉ.