கம்பராமாயணம் 6873 · யுத்த 9.20

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூலம் ஏய் தடக்கை அண்ணல் தானும் - சூலம் என்னும் படைக்கருவியை ஏந்தியுள்ள அகன்ற கரமுடைய பெருமைக்குரிய சிவபெருமானும்; ஓர் குரங்காய்த் தோன்றி - ஒரு குரங்காய்த் தோற்றமுற்றும்; ஏலுமேல் - (என்னோடு) போரில் எதிர்த்து நிற்பான் எனில்; இடைவது அல்லால் - (எனக்கு) பின்னிடுவானே அல்லாமல்; என்னை என் செய வல்லான்? - என்னை என்ன செய்துவிட வல்லவன்? என் கையில் அயில் முகப் பகழி விழுங்க - என் கரத்தினில் உள்ள கூர்முகமுடைய அம்புகள் (அச்சிவபிரான் எளிதில்) விழுங்கி விடுவதற்கு; வேலை நீர் கடைந்த மேல்நாள் - கடல் நீரைக் கடைந்த முன்னாளில்; உலகு எலாம் வெருவ வந்த - உலகம் யாவையும் அஞ்சி நடுங்குமாறு அக்கடலில் தோன்றிய; ஆலமோ? - நஞ்சோ? (இல்லை என்றபடி).

நஞ்சோ?-ஓகாரம் எதிர்மறை. முத்தலைச் சூலம். அண்ணல் - தலைமைக்குரிய சிறப்பினன். சிவபிரானை அண்ணல் எனச் சுட்டுவதால், கவிஞர் பிரானின் சமய சமரசப்பேருள்ளம் புலனாம். நான் வழிபட்டுயர்ந்த சிவனே குரங்காய் வந்திருந்தாலும், நான் பெற்றுள்ள வரத்தால் யார் என்னை என்ன செய்து விட முடியும்? எனக் கேட்கும் இராவணனின் இக்கூற்றால், அவன் ஆணவத்தின் கொடுமுடியில் ஏறியமர்ந்துள்ளமை கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even the great lord whose broad hand bears the trident — should he come as a monkey
  2. and stand against me, what could he do to me but give way?
  3. Is it the poison that rose long ago, when the ocean's waters were churned and all the world shook with fear —
  4. is the sharp-headed arrow in my hand that, for him to swallow? Ah!'

What the poem says

Irāvaṇaṉ goes further. Even Śiva, who holds the trident, could do nothing against him if he came disguised as a monkey. People said earlier that the monkeys were gods in disguise.

At the churning of the ocean Śiva swallowed the deadly poison that threatened the world. Irāvaṇaṉ says his arrows are not that poison; Śiva could not swallow them so easily. Irāvaṇaṉ was himself a devotee of Śiva, and this boast against his own god shows how far his pride has risen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cūlam ēy taṭak kai aṇṇaltāṉum, ōr kuraṅkāyt tōṉṟi
ēlumēl, iṭaivatu allāl eṉ ceya vallaṉ eṉṉai?
vēlai nīr kaṭainta mēlnāḷ ulaku elām veruva vanta
ālamō viḻuṅka, eṉ kai ayil mukap pakaḻi? ammā!