கம்பராமாயணம் 6874 · யுத்த 9.21

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் போன
எறி சுடர் நேமியான் வந்து ஏற்கிலும், என் கை வாளி,
பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போக்கு இலாத
மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண?

பொருள் · Meaning in Tamil

ஐய! - ஐயனே! அமர் எனக்கு அஞ்சிப்போன - போரில் (என் முன் நிற்க இயலாது) அஞ்சி ஓடிய; சுடர் எறி நேமியான் - ஒளி வீசுகின்ற சக்கரப் படையை ஏந்தியவனான திருமாலே; வந்து எதிர்ப்பினும் - (எனக்கு எதிர் நின்று) தாக்கினும்; என் கை வாளி பொறிபட - என் கரங்களில் உள்ள அம்புகள் தீப்பொறிகளைச் சிந்தியவாறு; சுடர்கள் தீய - (ஞாயிறு, திங்கள், தீ) எனும் முச்சுடர்களும் கரிந்து போகுமாறு; போவன - ஏகவல்லன; (அவ்வம்புகள் மறிகடல் கடைய - அலைகின்ற கடலைக் கடையும்போது; போக்கிலாத வந்த மணி கொல் ஆம்? - போகும் இடம் அறியாமல் (திருமால்மார்பினை வந்தடைந்த கெளத்துவ) மணியாகுமோ? (ஆகாது); அறிகிலை போலும் - இதனை நீ அறியாய் போலும்!

"நேமியானே வந்து எதிர்ப்பினும்” என வரவேண்டிய தேற்றேகாரம் மறைந்து நின்றதால் விரிக்கப் பெற்றது. "போக்கு அறு பனுவல்” (தொல். பாயிரம்) என்பதில், போக்கு குற்றம் எனும் பொருளில் வந்துள்ளது. நேமி - ஆழிப்படை, சக்கரம். மார்பில் பூண வாளி மணியன்று என்பதனால் அது மார்பைப் பிளக்கும் என்பது குறிப்பு. திருமால், புறமுதுகிட்டதாக இராவணன் முன்பும் (6182, 6186) உரைத்துள்ளான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You do not seem to know, sire: even if he who fled from me in fear in battle,
  2. the bearer of the blazing discus, came against me, the arrows of my hand
  3. would fly scattering sparks and scorching the lights of heaven; are they
  4. the jewel that came up when the restless sea was churned, for him to wear on his chest?'

What the poem says

Irāvaṇaṉ now challenges Viṣṇu himself, the bearer of the discus, whom he claims once fled from him. His arrows would throw off sparks and scorch the three lights: sun, moon and fire.

Viṣṇu wears on his chest the Kaustubha gem, which rose from the churned ocean. Irāvaṇaṉ's arrows, he sneers, are no ornament for that chest; they would split it open.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṟikilai pōlum, aiya! amar eṉakku añcip pōṉa
eṟi cuṭar nēmiyāṉ vantu etirppiṉum, eṉ kai vāḷi,
poṟi paṭa, cuṭarkaḷ tīyap pōvaṉa; pōkkilāta
maṟi kaṭal kaṭaiya, vanta maṇikolām, mārpil pūṇa?