கம்பராமாயணம் 6876 · யுத்த 9.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உள்ளமே தூது செல்ல - மனமே தூதுப் பொருளாகச் செல்ல; உயிர் அனார் உறையுள் நாடும் - (தம்) உயிரை ஒத்த காதலரின் இருப்பிடம் நோக்கிச் செல்கின்ற; கள்ளம் ஆர் மகளிர் சோர - வஞ்சனை மிக்க (நெறி பிறழும் பெண்டிர் உள்ளம் வருந்தவும்; நேமிப்புள் கவற்சி நீங்க - (பகலில் அணையும் சக்கரவாகப் பறவைகள் கவலை நீங்கவும்; கொள்ளை பூண்டு - மிகுதியாக நிறைந்து; அமரர் வைகும் - தேவர்கள் வசிக்கின்ற; குன்றையும் - மேருமலையையும்; கோட்டில் கொண்ட - உச்சிக்கோடு வரையிலும் மூடி நிற்கின்ற; வெள்ள நீர் வடிந்தது என்ன - வெள்ளமானது நீர் வடிந்தாற் போன்று; வீங்கு இருள் விடிந்தது - (உலகில்) பொங்கிப் பருத்திருந்த இருட்டு அகன்றது.
மேருமலையினையும் மூடி நின்ற ஒரு கறுப்பு வெள்ளம் மெல்ல வடிந்தது போல இருள் விடிந்தது என அழகுறக் கற்பித்தார். வான் முகடு வரையும் இருள் நிறைவதால், வான் முட்ட நிற்கும் மேருமலையின் உச்சியை மறைத்திருந்த இலங்கையைச் சூழ்ந்துள்ள இராவண ஆட்சியின் இருளும், பிராட்டியின் துயரக் கொடுமுடியாம் சோக இருளும் விடிய இருப்பதைக் குறிப்பால் குறிப்பித்தவாறுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the scheming women, who send their hearts ahead as messengers to the dwellings of lovers dear as life,
- lost heart, and the wheel-birds' sorrow left them,
- like a flood that, brimming, had held even the mountain where the gods dwell up to its peaks
- draining away, the swollen darkness gave way to dawn.
What the poem says
Night ends. The poet marks the dawn by those it affects. Women slipping out at night to secret lovers are dismayed by the light. The cakravāka birds, which by tradition are parted from their mates at night, rejoice.
The darkness had risen like a black flood up to the summit of Mount Mēru, home of the gods, and now it drains away. The commentary also reads this as a hint that the darkness of Irāvaṇaṉ's rule over Ilaṅkai, and of Cītai's grief, is about to lift.