கம்பராமாயணம் 6877 · யுத்த 9.24

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்னது ஓர் தன்மைத்து ஆம் - (இலங்கை) இத்தகைய ஒரு தன்மையினை உடையது ஆகும்; என்று எட்டியும் பார்க்க அஞ்சி - என்று எட்டிப் பார்க்கவும் பயந்து (அதன்); பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் கதிரவன் - பொன்மயமான மதிலின் வெளியிலேயே நாள்தோறும் செல்பவனாகிய சூரியன்; - (இப்போது) போர் மேல் கொண்டு - போரை ஏற்றுக்கொண்டு; மன்னவர்க்கு அரசன் வந்தான் - அரசர்க்கு அரசனான இராமபிரான் வந்தனன்; வலியம் என்று - (ஆதலால்) நாம் வலிமை பெற்று விட்டோம் என்று; தானும் தொல் நகர் காண்பான் போலத் தோற்றம் செய்தான் - தானும் பழைய அந்த இலங்கை மாநகரைக் காண விரும்பியவன் போலக் (கீழ்வானில்) உதித்தான்.

தற்குறிப்பேற்ற அணி. புவியியல் அமைப்பால், இலங்கையின் உச்சிமேல் கதிரவன் இயங்காமையுணர்ந்த கவிஞர்பிரான், இராவணன் கொடுங்கோன்மைக்கு அஞ்சி இலங்கை மாநகரின் உட்செல்ல அஞ்சி, மதிற்புறத்தே கதிரவன் உலவ நேர்ந்தது எனத் தற்குறிப்பினை ஏற்றிக் காண்பித்தார் இப்போது, அறத்தின் நாயகனான இராமபிரான் இலங்கையின் தலைவாயிலில் படையோடு நிற்கும் வலிமை கண்டு, தானும் துணிவு பெற்று, இலங்கையின் உள் நுழைந்து எட்டிப் பார்க்கும் துணிச்சலோடு தோன்றுவான் போலத் தோன்றினான். இலங்கையில் கதிரவன் இயங்காமை (4855) முன்பும் (7014) பின்பும் கூறப்படும். "இருசுடர் இயங்காப் பெருமூதிலங்கை" எனப் புறத்திரட்டும் இப்பெருமை புகலும். "பகலவன் மீது இயங்காமைக் காத்த பதி வீரன்” (2. 10. 11) என இராவணன் இலங்கையின் இப்புகழ் தேவாரத்தினும் பேசப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Afraid even to peer in, thinking it 'a place of such a kind,'
  2. he who every day passes outside its golden walls — 'Taking up war,
  3. the king of kings has come; we are strong now,' he thought — and he too,
  4. as if to look upon the ancient city, the sun made his appearance.

What the poem says

Sunrise is described with a poetic fancy. Tradition said that the sun never passed over Ilaṅkai. The poet explains this as fear: the sun was so afraid of Irāvaṇaṉ's tyranny that it kept to the far side of the city's golden walls.

Now that Irāmaṉ, king of kings, stands at the gates with an army, the sun takes courage and rises as though it wants a look at the city at last. The figure, attributing an invented motive to a natural event, is a favourite of Tamil poetics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉatu ōr taṉmaittu ām eṉṟu eṭṭiyum pārkka añci,
poṉ matil puṟattu nāḷum pōkiṉṟāṉ, ‘pōr mēṟkoṇṭu
maṉṉavarkku aracaṉ vantāṉ; valiyamāl ‘eṉṟu, tāṉum
tol nakar kāṇpāṉ pōla, katiravaṉ tōṟṟam ceytāṉ.