கம்பராமாயணம் 6878 · யுத்த 9.25

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருந்ததி அனைய நங்கை - அருந்ததி போன்ற கற்புடையாள் ஆகிய சீதா தேவி; அவ்வழி இருந்தாள் என்று - அந்த இலங்கையில் உள்ளாள் என்பது பற்றி; பொருந்திய காதல் தூண்ட - (உள்ளத்தே) பதிந்துள்ள காதல் தூண்டியதால்; பொன் நகர் காண்பான் போல - அழகிய இலங்கை மாநகரினைப் பார்க்க எழுந்தவன் போன்று; பெருந்துணை வீரர் சுற்ற - தனக்குப் பெருமைக்குரிய துணைவராய் இலங்கும் சுக்கிரீவன், வீடணன் ஆகிய இருவரும் இருபுறமும் செல்ல; தம்பியும் பின்பு செல்ல - தன் (அருமைத்) தம்பியாகிய இலக்குவனும் பின்னே வர; இருந்த மால் வரையின் உச்சி இராமன் ஏறினன் - தான் தங்கியிருந்த பெருமலையாகிய சுவேல மலையின் உச்சியை நோக்கி இராமபிரான் ஏறினான். இப்பால் - இதன் பின்னர்...

இச்செய்யுள் குளகம் அடுத்து வரும் கவிகளோடு கருத்து முடியும். காதலுக்கு உரியாரைக் காண இயலாத காலத்து, அவர் இருக்கும் இடமும் காணற்கு உரியதாய் ஆவல் தூண்டுமாதலின், "காதல்தூண்டப் பொன்னகர் காண்பான்" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The lady like Aruntati is there' — and so,
  2. urged by the love fixed in his heart, as if to look upon the golden city,
  3. with his great allies around him and his brother following behind,
  4. Irāmaṉ climbed to the summit of the great hill where he was staying; and then —

What the poem says

This begins the episode of Irāmaṉ viewing Ilaṅkai. He knows that Cītai, faithful as Aruntati, the star that stands for wifely loyalty, is somewhere inside the city. Moved by love, he climbs Mount Cuvēlam, where the army is camped. Cukkirīvaṉ and Vīṭaṇaṉ walk on either side and Ilakkuvaṉ follows behind.

When we cannot see someone we love, even the place where they are becomes precious to look at. The sentence is left open and finishes in the verses that follow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aruntati aṉaiya naṅkai avvaḻi iruntāḷ ‘eṉṟu
poruntiya kātal tūṇṭa, poṉ nakar kāṇpāṉ pōla,
perun tuṇai vīrar cuṟṟa, tampiyum piṉpu cella,
irunta mā malaiyiṉ ucci ēṟiṉaṉ irāmaṉ, ippāl.