கம்பராமாயணம் 6879 · யுத்த 9.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செருமலிவீரர் எல்லாம் - போர்புரியும் தன்மையுடைய வீரர் யாவரும்; சேர்ந்தனர் மருங்கு செல்ல - திரண்டு பக்கத்தே செல்ல; இருதிறல் வேந்தர் - இரண்டு திறமை வாய்ந்த சுக்கிரீவன், வீடணன் என்ற அரசர்க்கரசர்; தாங்கும் - பற்றி தாங்கிச் செல்லும்; இணை நெடும் கமலக் கையான் - இரண்டான நீண்ட செந்தாமரையனைய கைகளையுடைய இராமபிரான்; பொருவலி வயவெஞ்சீயம் - போரிடும் வலிமை வாய்ந்த திறல் மிக்க கொடிய சிங்கம் ஒன்று; யானையும் புலியும் சுற்ற - யானைகளும் புலிகளும் சுற்றிவர; ஓர் அரி அரசு - ஒப்பற்றதொரு இராச சிங்கம்; அருவரை இவர்வது அனையன் ஆனான் - அரிய குன்று ஒன்றின் மேல் ஏறுவது போன்றவன் ஆனான்.
இந்தப் பாடலில் வரும் உவமைக் காட்சியைத் திரிசடை கனவுபற்றிய பாடலொடு (5118) இணைத்துக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With all the warriors rich in battle gathered and moving at his side,
- he of the pair of long lotus hands, upheld by two mighty kings,
- as a fierce lion, strong in the fight, with elephants and tigers all around,
- was like a king of lions climbing a steep hill there.
What the poem says
Irāmaṉ climbs Mount Cuvēlam with the army around him, his hands resting on the two kings, Cukkirīvaṉ and Vīṭaṇaṉ, who walk beside him.
The scene is compared to a royal lion going up a hill, surrounded by elephants and tigers. The commentary links the image to the dream of Tiricaṭai, the friendly demoness who earlier dreamed of a lion and a pack of beasts as a sign of Ilaṅkai's fall.