கம்பராமாயணம் 6880 · யுத்த 9.27

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இரைத்துப் பொங்கும் - அலையொலித்துப் பொங்குகின்ற; கனைகடல் உலகம் எல்லாம் - ஆர்ப்பொலி மிக்க கடல் சூழ்ந்த உலகம் யாவும்; புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் - தனதகத்தே அழுந்தி மறையுமாறு செய்யும் இருளைப்போலே (பாவமாகிய இருளால்) பொங்கி (உலகை அழிக்க உள்ள) அரக்கர்களுடைய; புரமும் பொற்பும் - நகராகிய இலங்கையும் அதன் அழகும்; சிதைவு செய்குறியைக் காட்டி - அழியப் போகின்ற அடையாளத்தைக் காண்பித்து; உதயமது ஒழிய - உதயகிரிச் சிகரத்திலே உதிப்பதை நீக்கி; வடதிசைச் சிகரத்தின் - வடதிசைக்கண் உள்ள ஒரு மலைச்சிகரத்தில்; தோன்றும் கரு ஞாயிறு ஒத்தான் - உதிக்கின்ற ஒரு கரிய சூரியனைப் போன்றவன் ஆனான் (இராமபிரான்.

கதிரவன் உதய காலத்தே, சுவேலமலைமேல் நின்ற இராமபிரானை, வடக்கே உதித்த கரு ஞாயிறு என வருணித்தார். கருஞாயிறு இராமனுக்கு உவமை. "கட்டார்சிலைக் கருஞாயிறு புரைவான்" (9406); "கண்தாமரை போல் கருஞாயிறு என” (2610); "செந்தண் கமலக்கண் சிவந்த வாயோர் கருஞாயிறு, அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே!" (திருவாய்: 8: 5: 7) என வருவன காண்க. உதயமது அது பகுதிப் பொருள் விகுதி. தன்மைக் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the world all girdled by the roaring sea that surges and crashes in fury,
  2. the demons, swelling like a darkness that buries it — of their city and their splendour
  3. showing the sign of ruin, on a summit of the northern hill
  4. he was like a black sun that rose, forsaking its proper rising-place.

What the poem says

At sunrise Irāmaṉ stands on the hilltop to the north of the city, and the poet calls him a black sun. He is dark-skinned like Viṣṇu, and he has risen in the north rather than in the east.

The demons are like a darkness that would swallow the whole sea-girt world. Irāmaṉ's appearance is the omen that their city and its glory are about to be destroyed. The image of the Lord as a dark sun also appears in the hymns of Nammāḻvār.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1katam mikuntu iraittup poṅkum kaṉai kaṭal ulakam ellām
putaivu cey iruḷiṉ poṅkum arakkartam puramum, poṟpum,
citaivu cey kuṟiyaik kāṭṭi vaṭa ticaic cikarak kuṉṟiṉ,
utayamatu oḻiyat tōṉṟum, oru karu ñāyiṟu ottāṉ.