கம்பராமாயணம் 6881 · யுத்த 9.28

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துமிலத் திண்செருவின் - பேர்ஒலியுடன் எழும் வலிய போரில்; வாளிப் பெருமழை - அம்புகளாகிய பெரியமழை; சொரியத் தோன்றும் - பொழியுமாறு தோன்றும்; விமலத் திண்சிலையன் - மாசற்ற நண்ணிய வில்லை ஏந்தியவனாகி, ஆண்டு ஓர் வெற்பினை மேயவீரன் - அங்கே ஒரு மலையை யடைந்தவனாகிய இராமபிரான்; அமலத்திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன - தூய்மை பொருந்திய திருக்கைகளும், திருவடிகளும், திருமுகமும் திருக்கண்களும் ஆன; கமலத் திண்காடு பூத்த - வளமான தாமரைக்காடு பூத்துக் கிடக்றெ; காளமாமேகம் ஒத்தான் - கரிய பெரிய காளமேகம் போன்றவன் ஆனான்.

துமிலம் - பேரொலி, ஆரவாரம். தாமரைக்காடு அனையான் இராமன். ஒப்பு: (திருவாய். 8: 5: 1). நீல மேனியிடை செந்நிற உறுப்புகள் இயைந்து பொலிவதைப் புலப்படுத்தும் இப்பாடல் படிமம். கம்பரைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது; அவர் போற்றிய படிமத்துக்கு மூலம் ஆழ்வார் அருளிச் செயலே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Appearing ready to pour a great rain of arrows in the thunderous, hard-fought battle,
  2. the hero with the spotless, sturdy bow, who had come up onto a hill there,
  3. with his pure strong hands and feet and face and eyes,
  4. was like a great black rain-cloud on which a dense forest of lotuses had bloomed.

What the poem says

Another image of Irāmaṉ on the hill. He is about to rain arrows the way a storm cloud rains water, and his dark body is the cloud. His hands, feet, face and eyes are red like lotuses, so he looks like a dark cloud covered in lotus blooms.

The picture of red lotus-limbs set against a dark body comes from the hymns of the Āḻvārs, the Tamil Vaiṣṇava saints. Kampaṉ evidently loved it and returns to it often.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tumilat tiṇ ceruviṉ vāḷip peru maḻai coriyat tōṉṟum
vimalat tiṇ cilaiyaṉ, āṇṭu ōr veṟpiṉai mēya vīraṉ,
amalat tiṇ karamum kālum vataṉamum kaṇṇum āṉa,
kamalat tiṇkāṭu pūtta kāḷa mā mēkam ottāṉ.