கம்பராமாயணம் 6882 · யுத்த 9.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வானத்து ஓங்கி கல் குவடு அடுக்கி - ஆகாயத்தளவு உயர்ந்த கல்மலைகளை யடுக்கி; வாரி கடலினைக் கடந்த - நீர் வருகையையுடைய கடலினைக் கடந்த; நல்குவடு அனைய காட்சி வீரர்- நல்ல மலைகளை ஒத்தவராய்க் காட்சி தரும் வானர வீரர்களின்; ஈட்டத்தின் நடுவண் நின்றான்- கூட்டத்தில் நின்றவனான; மல்குவடு திண்தோள் - வலிய சிகரத்தை ஒத்த திண்ணிய தோள்களையுடைய; மானவன் - மனுக்குலத்தில் தோன்றிய இராமபிரான்; பொன்குவடு இடையே தோன்றும் - பொன் மலைகளின் நடுவே காணப்படும்; மரகதக் குன்றம் போன்றான் - மரகத மலையைப் போன்று விளங்கினான்.
கற்குவடுகளைச் சுமந்த அவர்கள் தோள்கள் பொற்குவடுகள் ஆயின, அப்பொற்குவடுகளுக்கிடையே மரகதமலையென இராமபிரான் நின்றான் என்பதாம். "எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்" (திருவாய் : 2: 5: 4); "வள்ளலே! மதுசூதனா! மரகத மலையே! (திருவாய் : 2: 6: 4) என நம்மாழ்வார் மரகத மலை எனப் பரவுதல் இங்கு நினைவு கூரத் தகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The man of Manu's line, his strong shoulders like massive peaks,
- amid the warriors who, piling up the stone peaks that soar into the sky, crossed the sea, a sight
- like fine mountains themselves — in the midst of that throng he stood,
- like a hill of emerald appearing among peaks of gold.
What the poem says
Irāmaṉ stands among the monkey warriors who built the causeway by piling up mountains. The monkeys look like mountains themselves, golden in the morning light, and in their midst Irāmaṉ, dark green-blue, is like a hill of emerald.
The emerald mountain is again an image from Nammāḻvār, who addresses the Lord as an emerald hill.