கம்பராமாயணம் 6883 · யுத்த 9.30

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிணை நெடுங்கண்ணி என்னும் - பெண்மானைப் போன்ற நீண்ட கண்களையுடைய சீதை என்கின்ற; இன்னுயிர் பிரிந்த பின்னை - இனிய (தன்) உயிரைப் பிரிந்த பிறகு; துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் - துணையைப் பிரிந்து வாடும் ஆண் அன்றில் பறவை போல மனம் கலங்கியவனாய்; நெடுங்கடலில் அணைதோன்ற - நீண்டகடலில் அணை (கட்டப்பட்டுத்) தோற்றம் தருதலால்; ஆறிய சீற்றத்து ஐயன் - தணிந்த கோபத்தை யுடையவனான இராமபிரான்; நெடு இணைக் கமலக் கண்ணால் - நீண்ட இரு தாமரைக் கண்களாலும்; இலங்கையை எய்தக் கண்டான் - இலங்கை மாநகரை நன்றாக நோக்கினான்.

பிராட்டியைப் பெற நெடுங்கடல் குறுக்கே தடையாய்க் கிடப்பதால் எழுந்த சினம், அதற்கு அணை கட்டிய பின், பிராட்டியை அடைய வழி கிட்டிவிட்டதென ஆறத் தொடங்கியதால், "அணை தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன்” என்றார். கடலுக்கு அணையிட வழி செய்யாததால் வருணன் மேல் எழுந்த சீற்றம், இப்போது வடிந்துள்ளது என்க. பிராட்டி இராமபிரானின் இன்னுயிர் என்று இக்காவியத்தின் பல இடங்களில் வரும். (4020, 5305, 5306, 3474)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the causeway showing across the long sea, the lord whose rage had cooled,
  2. since he was parted from his sweet life, she of the long doe-eyes,
  3. trembling like a male aṉṟil bird that pines apart from its mate,
  4. gazed long at Ilaṅkai with his pair of long lotus eyes.

What the poem says

From the hilltop Irāmaṉ looks at Ilaṅkai for the first time. His anger at the sea, which had blocked his way to Cītai, has cooled now that the causeway is built and the path to her is open.

Still, he is shaken with longing. He is like the male aṉṟil, a bird in Tamil poetry famous for pining when separated from its mate. Throughout the epic Cītai is called Irāmaṉ's very life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇai neṭuṅ kaṭalil tōṉṟa, āṟiya cīṟṟattu aiyaṉ,
piṇai neṭuṅ kaṇṇi eṉṉum iṉṉuyir pirinta piṉṉai,
tuṇai pirintu ayarum aṉṟiṟ cēvaliṉ tuḷaṅkukiṉṟāṉ,
iṇai neṭuṅ kamalak kaṇṇāl ilaṅkaiyai eytak kaṇṭāṉ.