கம்பராமாயணம் 6884 · யுத்த 9.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருங்கவிப் புலவர் - (இராமபிரான் இலக்குவனை நோக்கி) (தம்பீ!) அரிய கவிதைகளைப் பாடவல்ல புலவர்கள் (எல்லாம்); நம்திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் - நம் அழகிய அயோத்தி முதலான உலகில் உள்ள பிற நகரங்கள் யாவற்றிற்கும்; வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை - உள்ளத்தில் எழுந்த உவமைகளைச் சொல்லிப் புகழத் தொடங்கிய பொழுது (எல்லாம்); இந்திரன் இருக்கை என்பார் - (உவமைப்பொருள் ஆக) தேவர் தலைவனாகிய இந்திரனின் இருப்பிடமான அமராவதி நகர் என்பார்கள்; இலங்கையை எடுத்துக்காட்டார்- (அதனினும் உயர்ந்த) (இந்த) இலங்கை மாநகரை உவமைப் பொருளாக எடுத்துக் காட்டமாட்டார்கள்; அந்தரம் உணர்தல் தேற்றார் - (அந்த அமராவதி நகருக்கும் இந்த இலங்கை மாநகருக்கும் உள்ள) வேறுபாட்டை அப்புலவர்கள் உணரும் தெளிவுடையார் அல்லர் (போலும்).
பேர் உவமை - உவமேயத்தைக் காட்டிலும் உயர்ந்த உவமை. "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை" (தொல். உவம. 3) அந்தரம் - வேறுபாடு. புலவர் இலங்கைக்கும் அமராவதிக்கும் வேறுபாடு தெரியின், நம்திருநகரே யாதி வேறு உள நகர்கட்கெல்லாம் இந்திர இருக்கையாகிய அமராவதியை உவமிப்பதை விடுத்து, இந்த இலங்கை நகரத்தையோ எடுத்துக்காட்டுவர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'For our fair city first, and for all the other cities there are,
- when poets set out to praise them with the grandest comparisons that come to mind,
- they say "Intiraṉ's seat"; they never hold up Ilaṅkai;
- they cannot grasp the difference, these poets of rare verse! Ah!'
What the poem says
Irāmaṉ begins to describe the city to Ilakkuvaṉ. Poets who want to praise a city, even their own Ayōttī, compare it to Amarāvatī, the heavenly capital of Intiraṉ. That is because a comparison should always be to something greater.
But if those poets had seen Ilaṅkai, he says, they would know it is far finer than Amarāvatī. They would use Ilaṅkai as their standard instead.