கம்பராமாயணம் 6886 · யுத்த 9.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரிகின்ற கதிர ஆகி - பரந்து வீசுகின்ற கிரணங்களை யுடையனவாய், மிளிர்கின்ற மணிகள் வீச - விளங்குகின்ற நவமணிகள் ஒளி வீசுவதனால்; சொரிகின்ற சுடரின் சும்மை - பொழிகின்ற ஒளித்தொகுதி; விசும்புறத் தொடரும் தோற்றம் - வானளாவித் தொடர்ந்து நிற்கின்ற தோற்றமானது; அரிவென்ற வெற்றி ஆற்றல் மாருதி - பகைமையை வென்று தீர்க்கும் வெற்றித் திறனுடைய அநுமன் ஆனவன்; அமைத்த தீயால் - (தன் வாலால்) இட்ட தீயால்; இக்கொடி நகர் இன்னும் எரிகின்றதாயே - இந்தக் கொடிகள் சூழும் இலங்கை மாநகர் இப்போதும் எரிந்து கொண்டிருப்பது போலவே; இருந்தது காண் - இருப்பதைப் பார்ப்பாயாக.
மணிகள் சிந்தும் ஒளித்தொகுதி, இலங்கை அனுமன் இட்ட தீயால் இன்னும் எரிந்து கொண்டிருப்பது போன்றே தோற்றம் அளித்ததாகக் கற்பித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- With spreading rays, as the glittering gems flash out,
- the mass of light they pour, rising on and on into the sky, appears
- as if, from the fire laid by Māruti of conquering might who vanquishes foes,
- this city of banners were burning still — see it.
What the poem says
Irāmaṉ points out the glow rising from the jewelled city. The light pouring up from its gems makes it look as though Ilaṅkai were still burning from the fire Aṉumaṉ (Māruti, son of the Wind) set with his tail.
The image is both praise of the city's splendour and a reminder of the damage the monkeys have already done.