கம்பராமாயணம் 6887 · யுத்த 9.34

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மாசு அடப் பரந்த மான மரகதத் தலத்து வைத்த
காசு இடைச் சமைந்த மாடம், கதிர்த் தழைக் கற்றை சுற்ற
ஆசு அறக் குயின்ற வெள்ளி அகல்மனை அன்னம் ஆக,
பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்!

பொருள் · Meaning in Tamil

மாசு அடை - அழுக்கு நுழையாமல் அடைக்கப் பெற்ற; பரந்தமான மரகதத்தலத்து வைத்த - விரிந்து சிறந்த மரகதத் தலத்தில் கட்டப்பட்ட; காசு அடை சமைந்தமாடம் - பொன்னால் நெடுக வேயப்பட்ட மாடங்கள்; கதிர் நிறக் கற்றைசுற்ற - சூரியனுடைய மை போன்ற ஒளிக்கற்றைகள் சூழுமாறு அமைய; ஆசு அறக் குயின்ற - குற்றம் நீங்க அமைக்கப்பெற்ற; வெள்ளி அகல்மனை - வெள்ளியால் அமைந்த விரிந்த மனைகள்; அன்னம் ஆக - அன்னம் போன்று ஒளிர; பாசு அடைப் பொய்கை - பசிய இலைகள் பரவிய பொய்கைகளில்; பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்! - பூத்துக் கிடக்கிற தாமரை மலர்களைப் போன்றிலங்குவதைப் பாராய்!

காசு-காரிய ஆகுபெயராய் பொன்னைக் குறித்தது. இங்கு அடை - நெருக்கத்தைக் குறித்தது. பாசு அடை-இங்கு அடை இலையைக் குறித்தது.

மரகதத்தளம் பொய்கை யாகவும், செம்பொற் கூரைமாடங்கள் செந்தாமரைகளாகவும், அவற்றின் மீதுள்ள வெள்ளி வீடுகள், செந்தாமரை மலர்களின் மேலுள்ள அன்னங்களாகவும் மனக்கண்ணால் கண்டு நமக்கும் காட்டுகின்றார் கவிஞர் பிரான் அடை எனும் சொல் வெவ்வேறு பொருள்களில் அமைய வந்த திரிபு அணியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Set on broad, splendid floors of emerald, sealed against all dirt,
  2. the mansions thickly roofed with gold, ringed by sheaves of sun-coloured light,
  3. with wide houses of silver, flawlessly wrought, sitting on them like swans,
  4. look — they are like lotuses blooming in a pool of green leaves!'

What the poem says

Irāmaṉ points out another view to Ilakkuvaṉ. The emerald ground looks like a green pond. The gold-roofed mansions are the red lotuses blooming in it, and the silver upper storeys on top are swans resting on the flowers.

The verse plays on the word aṭai, which here means 'closely set', 'sealed' and 'leaf' in different places. The commentary names this as a figure of wordplay.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘mācu aṭai paranta māṉa marakatat talattu vaitta
kācu aṭai camainta māṭam, katir niṟak kaṟṟai cuṟṟa
ācu aṟak kuyiṉṟa veḷḷi akal maṉai aṉṉam āka,
pācaṭaip poykai pūtta paṅkayam nikarppa pārāy!