கம்பராமாயணம் 6888 · யுத்த 9.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தீச் சிகை சிவணும் சோதி - அக்கினிக் கொழுந்து போலும் ஒளியினையுடைய; செம்மணிச் செய்ததூணின் - சிவந்த மாணிக்கங்களைப் பதித்துச் செய்யப் பெற்ற தூண்கள் நாட்டப்பெற்ற; தூச்சுடர் மாடம் ஈண்டித் துறுதலால் - தூய்மையான ஒளிமிக்க மாடங்கள் நெருங்கிச் சுடர் விடுதலால்; கருமை தோன்றா - கருநிறம் தோன்றாமல்; மீச்செலும் மேகம் எல்லாம் - ஆகாயத்தில் பரவிச் செல்லும் மேகங்கள் எல்லாம்; விரிசுடர் இலங்கை வேவ - விரிந்து பரவும் ஒளியுடைய இலங்கை (அநுமனால் தீயிடப்பட்ட அன்று) எரிந்து போகும்போது; காய்ச்சிய இரும்பு மான - (அப்பெருந் தீயிற்) காய்ச்சப் பட்ட இரும்பினைப் போல; சேந்து ஒளி கஞல்வ காணாய் - செந்நிறம் பெற்று ஒளி மிக விளங்குவதைக் காண்பாயாக.
தீச்சிகை - அனற்கொழுந்து. சிவணல் - ஒத்தல். இலங்கை உலைக்கூடமாகவும் மாடங்கள் உலையாகவும், செம்மணிகள் பதித்த தூண்கள் உலையில் எழுந்த அனற்கொழுந்துகளாகவும் சிவந்த வான் மேகங்கள் அனல்கொழுந்துகளால் உலையிற் காய்ச்சப் பெற்ற இரும்புப் பாளங்களாகவும் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because, with pillars made of red gems glowing like tongues of flame,
- mansions of pure light crowd close together, the clouds show no blackness;
- all the clouds that drift above, as though bright Ilaṅkai were burning,
- redden like iron heated in the forge and blaze with light — see!
What the poem says
The ruby pillars of the mansions throw up so much red light that the clouds overhead lose their dark colour and glow red, like iron heated in a forge, as if the city were burning again.
The commentary works out the metaphor: the city is the smithy, the mansions are the furnaces, the ruby pillars are the flames, and the reddened clouds are the bars of iron being heated.