கம்பராமாயணம் 6889 · யுத்த 9.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில்படி திரள் தோள்வீர! - வில்லின் தழும்புகள் எப்போதும் பதிந்துள்ள அகன்ற தோள்களுக்குரியவனே! வெங்கண் யானை - கடுஞ்சினம் கொண்ட கண்களையுடைய யானைகள்; அல்படி நிறத்தவேனும் - இருள் படிந்தாற் போன்ற கருமை நிறம் உடையவாயினும்; ஆடகத் தலத்தை ஆழ - (இலங்கையின் பொன்னாலான தரையினை ஆழமாக; கல்படி வயிரத்திண் கால் - கல்லைப் போன்ற வன்மை வாய்ந்த திண்ணிய கால்களின்; நகங்களின் கல்லி - நகங்களால் அகழ்ந்தெடுத்து; கையால் பொற்பொடி என்ன வீச - (தம்) துதிக்கைகளால் பொன்பொடி போல் (மேலே) வீசி; பொன்மலை என்னப் போவ - பொன்மலைகள் நகர்ந்தால் போல் போவதை; நோக்குதி - பார்ப்பாயாக.
வில்-வில் தழும்பினைக் குறித்து நின்றது. இதுமுதல் இனிவரும் பத்துப் பாடல்களிலும் இலக்குவனின் வீரம் செழுமிய உறுப்புகளையும் பண்பினையும் தொடர்ந்து பெருமான் போற்றிக் கூறி, அவனுக்கு விழிகளாலேயே ஒரு புகழ் மாலை தொடுத்துச் சூட்டுவதனை நோக்குக. உலகத்து யானைகள் தலையில் மண்ணைவாரிப் போட்டுக் கொள்வது இயல்பாக இருக்க இலங்கை மாநகரத்து யானைகள் பொன்னை வாரிப் போட்டுக் கொள்ளும் எனும் சமற்காரம் உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hero whose rounded shoulders bear the bowstring's mark! Look: the fierce-eyed elephants,
- though dark as night itself, digging deep into the ground of gold
- with the nails of their strong feet, hard as stone, and with their trunks
- tossing it up like gold dust, move along like mountains of gold.
What the poem says
Irāmaṉ addresses Ilakkuvaṉ, whose shoulders are scarred by the bowstring. Elephants everywhere toss dust over themselves. In Ilaṅkai, where the ground is gold, the dark elephants scoop up gold dust instead and end up looking like moving mountains of gold.
From here on, for about ten verses, Irāmaṉ addresses his brother with a series of admiring epithets, so the description of the city also becomes a garland of praise for Ilakkuvaṉ.