கம்பராமாயணம் 6890 · யுத்த 9.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூசல் வில் குமர ! - போரிடற்குரிய வில் ஏந்தும் குமரனே! புகர் அற விளங்கும் பொற்பின் - குற்றம் நீங்குமாறு விளங்கும் அழகினையுடைய; காசு உடைக் கதிரின் கற்றை - (கொடிக்கம்பங்களில் பதிக்கப் பெற்றுள்ள இரத்தின) மணிகளால் ஆகிய ஒளித் தொகுதிகளையுடையனவாம்; கால்களால் கதுவுகின்ற - காற்றால் பற்றப்பட்டு; வீசுபொன் கொடிகள் எல்லாம் - அசைகின்ற அழகிய கொடிகள் யாவும்; விசும்பின் விரிந்த - விண்ணில் பரவியுள்ள; மேக மாசு அறத்துடைத்து - மேகங்கள் என்னும் அழுக்கினைத்துடைத்தெடுத்து; அவ்வானம் விளக்குவ போல்வ நோக்காய் - அவ்விண்ணைத் துலக்குவன போன்றுள்ளமையைக் காண்பாயாக.
புகர்-குற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Prince of the battle-bow, look! Of flawless, shining beauty,
- with sheaves of light from their jewels, caught up by the winds,
- all the fluttering golden banners, wiping clean the stain
- of clouds spread across the sky, seem to polish that heaven bright!'
What the poem says
Irāmaṉ points to the banners on the city's flagstaffs, which are studded with gems and flutter in the wind. As they wave against the sky they seem to wipe away the clouds like a cloth wiping dirt, and so to polish the heavens clean.