கம்பராமாயணம் 6891 · யுத்த 9.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இம் மூதூர் - இத்தொன்மை வாய்ந்த இலங்கை; நூல் படத் தொடர்ந்த - (சிற்பிகளால் கோணல் என்பதேயின்றி) நூல் இட்டு நேர் வரிசையில் உள்ளனவும்; சித்திரம் நுனித்த பத்தி - ஓவியங்கள் நுட்பமாகத் தீட்டப்பட்ட வரிசையானவையும் ஆகிய; கோல் படு மனைகள் ஆய குலமணி எவையும் கூட்டி - அழகமைந்த வீடுகள் என்னும் சிறந்த மணிகள் யாவற்றையும் இணைத்து; சால்பு அடுத்து - (ஒரு கோவையாக) பொருந்தும்படி அமைத்து; அரக்கன் மாடத் தனிமணி நடுவண் சார்த்தி - அரக்கர் கோனாகிய இராவணனது அரண்மனையாகிய நாயகமணியினை நடுவிலே சார வைத்து; மால் கடற்கு இறைவன் - பெருங்கடல்களுக்கு அரசனாகிய வருணதேவன்; பூண்ட மாலை போன்று உளது - அணிந்து கொண்ட மணிமாலை போன்று உள்ளது.
கோலம், கோல் என நின்று அழகு எனும் பொருள் தந்தது. சால் படுத்தல்- பொருந்தும் படி வைத்தல். இந்திரனே சாலுங்கரி (குறள் 25) எனுமிடத்து, சாலுதல் பொருந்துதல் எனும் பொருளில் வருதல் காண்க.
சிற்ப சாத்திர வல்லுநர்கள் நூலிட்டு, நேர்பட அமையும் தெருக்களோடும், ஊரின் நடுவே அமையும் அரச மாளிகையோடும் நகர்களை அமைக்கும் திறத்தை நன்குணர்ந்தவர் கவிஞர்பிரான்.
"நூல் அறிபுலவர் நுண்ணிதிற் கயிறு இட்டுத் தேஎங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து" (நெடுநல் 76-79) எனும் சங்கப் பாடற் சான்றால், இந்நிலத்தில் ஊர் அமைப்புக்கலையும் மனையமைப்புக் கலையும் தொன்மைச் சிறப்பொடு திகழும் பாங்கு புலனாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Laid out true along the cord, with rows finely painted in fresh gold,
- the beautiful houses, all of them like gems of the finest kind, strung together,
- fitly arranged, with the demon's palace set in the middle as the single central jewel —
- this ancient city is like a garland worn by the lord of the great sea.
What the poem says
Irāmaṉ sees the layout of Ilaṅkai as a whole. The houses stand in straight rows, laid out with a measuring cord, and each one is like a gem. Irāvaṇaṉ's palace sits at the centre like the pendant jewel. The whole city looks like a necklace worn by Varuṇaṉ, lord of the ocean that surrounds it.
The commentary notes that Kampaṉ knew traditional town-planning, with its straight streets and the royal palace at the centre. It cites a Sangam poem describing architects who mark out a site with a cord and orient the king's house by the directions.